Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

சீனாவின் கைக்கூலிகளாக...

$
0
0
இதுபோன்ற விளக்கங்கள் வேறு எந்த ஒரு  ஊடகங்களும்  சொல்லாத ஒன்று. தெரிந்தாலும்  பேசமாட்டார்கள். கட்டுமரத்தில்  விழ வித்துக்கள் இந்த பபுரூட் லாங்குவேஜும், ஸ்டாலீனும். வெளிப்படையாகவே  சீனாவின்  கைக்கூலிகளாக மாறிவிட்ட  திமுக கும்பல்.


ஹாரீஸ் ஜெயராஜோடு ஆங்கிலமும் இன்னும் வாயிலே நுழையாத , எந்த மொழியிலுமே சேராத "ஒவாம ஹீய, ஹாம தாய.."என பாடி கொண்டு பின் இப்பொழுது அரபி கற்றுகொண்டிருக்கும் இளையராசாவின் சீமந்த வாரிசு இந்தி தமிழருக்கு வேண்டாம் என்பதெல்லாம் மாபெரும் காமெடி, என்பதும், அதையும் ஒரு பக்கம் புரட்சி என கொண்டாடும் கூட்டம் அதைவிட காமெடி என்பதும் சமீபத்திய தமிழக காமெடிகள்.
முதலில் "யுவன் சங்கர் ராஜா"எனும் பெயரே தமிழ்பெயர் அல்ல என்பதுதான் உச்சகட்ட காமெடி
தமிழகத்தில் கருப்புகொடி கோஷ்டி இப்பொழுது டிசர்ட்டுக்கு மாறி இந்தி ஒழிக என சொல்லிகொண்டிருப்பதை சென்னையில் உள்ள சர்வதேச தூதரகங்கள் வித்தியாசமாக நோக்கி கொண்டிருக்கின்றன‌
"இந்தியா உலக அரங்கில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த கோஷ்டி ஏன் சம்பந்தமில்லாமல் உளறி கொண்டிருக்கின்றன, ஓ இவர்கள் திமுக அல்லவா? நோ வொண்டர்.."என்றபடி ஜன்னலை சாத்திவிட்டு அவை உலக செய்திகளுக்குள் புகுந்துவிட்டன‌
இந்தியாவின் ராஜ்நாத்சிங்கின் ரஷ்ய பயணம் உலக செய்தியாகிவிட்டது, உலகம் அதன் விளைவுகளை கவனித்து கொண்டிருக்கின்றன‌
ராஜ்நாத்சிங் சீனா பங்குபெறும் ஷாங்காய் மாநாட்டில் பங்குபெற மாஸ்கோ சென்றார், அங்கு சீன பிரதிநிதியுடன் அதாவது சீன உள்துறை அமைச்சருடன் 2 மணிநேரம் பேசி இந்தியாவின் நிலைபாட்டை விளக்கினார்
இந்தியாவின் நிலைப்பாடு வேறு எதுவுமல்ல, வெள்ளையன் விட்டுசென்ற எல்லைபடி எம் பகுதி, அதற்குமேல் பேச ஒன்றுமில்லை என்பது
மேற்கொண்டு 2 மணிநேரம் என்ன பேசினார் என்றால் இந்தியாவோடு அமைதியாக சென்றால் சீனாவுக்கு இருக்கும் அனுகூலம் இந்தியாவோடு மோதினால் அவர்களுக்கு கிடைக்கபோகும் பெரும் அடி இன்னபிற விஷயங்களை எடுத்து கூறிவிட்டு வந்துவிட்டார்
அப்படியே ரஷ்யாவிடம் இந்திய நிலைப்பாட்டை விளக்கி சொல்லிவிட்டு வந்துவிட்டார்
ராஜ்நாத்சிங்கின் பயணம் சொல்வது இதுதான் "சமாதானத்துக்கும் போருக்கும் இந்தியா தயார், இனி ,முடிவெடுக்க வேண்டியது சீனா, மேற்கொண்டு இந்தியா ஏதும் பேச அவசியமில்லை"
சீனா ஒரு தந்திரமான நாடு, அது எப்பொழுதெல்லாம் பலத்தால் சரிந்து கிடக்குமோ அப்பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு வராமல் ஓடும்
அப்படித்தான் முன்பு பிரிட்டன் மக்மோகன் கோட்டை வரைந்தபொழுது ஓளிந்து கொண்டது அல்லது நழுவியது, அவர்களின் மவுனம் ஒரு பதுங்கல்
எப்பொழுதெல்லாம் அவர்கள் பலமாகி இந்தியா பலவீனமாகுமோ அப்பொழுதெல்லாம் மிரட்டி கொண்டு ஓடிவருவார்கள்
இப்பொழுது பலமான இந்தியா என்பதால் வழக்கம்போல் பம்முகின்றார்கள், அப்பக்கம் அமெரிக்காவின் தலையீடு வேறு கூடுதல் பயம்
இதனால் தன் வழக்கமான சைலன்டு மோடுக்கு போய் விட்ட சீனா இனி அமெரிக்க தேர்தல் முடிவுக்காக காத்திருகின்றது, இந்தியாவில் தன் உளவு நிறுவணம் மூலம் ஏதும் செய்து மோடி அரசுக்கு சிக்கல் உண்டாக்கி இந்தியா பலவீனமானால் பாயும் திட்டமும் இருக்கலாம்
தமிழகத்தில் "சிகப்பு"டீசர்ட் என்பது கொஞ்சம் கவனிக்கபட வேண்டிய விஷயம், மறுபடி திமுக மொழிப்போர் என தொடங்கினால் இந்தியா ராணுவத்தை இறக்கினால் , அதை சர்வதேச சிக்கலாக சீனா மாற்ற கூடும்
அதாவது திபெத் ஒரு தனிநாடு என்பது போல் இந்தியா பேசதொடங்கியிருக்கும் நேரமிது, நாடுகடந்த திபெத் அரசு இன்னும் உண்டு , இப்பொழுது அது வாயினை திறக்கின்றது
அது திபெத்துக்கும் இந்தியாவுக்குமே ஒப்பந்தம் சீனாவுக்கு உரிமை இல்லை என பேச தொடங்கியிருப்பது சீனாவுக்கு கடும் அதிர்ச்சி, பேச வைப்பது இந்தியா என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
திபெத் தனிநாடு என இந்தியா அறிவிக்கும் பட்சத்தில் சீனாவுக்கு அது பெரும் அடியாகும், அந்நேரம் இந்தியாவின் ஒரு மாநிலம் பற்றி எரிந்து அதை தனக்கு சாதகமாக சீனா மாற்றும் ஆபத்தும் உண்டு
இந்தியா திபெத்தை கையில் எடுத்தால் சீனா இந்தியாவில் பற்றி எரியும் மாநிலத்தை கையில் எடுக்கும்
இதனால் இந்த "சிகப்பு"டீசர்ட் என்பது இந்திய உளவுதுறையால் கொஞ்சம் நோக்கபடும் விஷயமாயிற்று, சும்மா கனிமொழியுடன் போஸ் கொடுத்து கொண்டிருப்பதோ, இலவசமாக கிடைக்கும் என டீசர்ட் அணிந்து செல்பி எடுப்பதெல்லாம் கண்காணிக்கபட்டு கொண்டுதான் இருக்கின்றது
இந்நிலையில் யுத்தம் வந்தால் இந்தியாவுக்கு இருமுனை தொல்லை கொடுக்க பாகிஸ்தானையும் தயார் செய்தது சீனா
பாகிஸ்தானும் எல்லையில் ஏதோ செய்ய தொடங்கியிருகின்றது
ரஷ்யா சென்ற ராஜ்நாத்சிங் ஈரானில் இறங்கி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் சில சந்திப்பினை நடத்திவிட்டுத்தான் சென்றார்
அதில் பாகிஸ்தானுக்கான எச்சரிக்க்கை இருக்கின்றது என்கின்றன செய்திகள்
இந்தியாவும் ஈரானும் என்ன பேசுகின்றன என்பதை ஒட்டு கேட்ட பாகிஸ்தானை அழைத்த ஈரான் இப்படி பேசிற்று
"என்ன ஓட்டு கேட்டியாக்கும்
ஆமாண்ணே
அதான் நாங்களே சொல்வோமே, வேற ஏன் ஒட்டு கேட்டே?
ஹிஹிஹி சும்மாண்ணே
தம்பி, சீனாவோட மாநிலமா நீ ஆயிட்டியாம் இலவசமா உன் ராணுவமும் சீனாவுக்கு கிடைச்சிட்டாம்
அண்ணே
இருடா, இதுனால நீயும் சண்டைக்கு கிளம்புறியாம். சண்டைன்னு வந்தா என்னாகும் தெரியுமில்ல‌
என்னாகும்ணே
சிந்துவெளி நாகரிகம் மாதிரி பொதைஞ்சி போயிருவீகளாம், திரும்ப வர பல ஆயிரம் ஆண்டு ஆகுமாம்
இதெல்லாம் மிரட்டல்ணே
இன்னும் இருக்குடா பலுசிஸ்தான்....வர்சிஸ்தான்.. கைபர்.."
இப்படி ஈரான் சொல்ல சொல்ல பாஷா படத்து கல்லூரி முதல்வர் போல வியர்ந்து வழிந்து கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்
அவர்களுக்கு வியர்க்கட்டும், நமக்கு வியர்ப்பதை சொல்கின்றோம்
இந்தியாவில் ஜே.என்,யூ மாணவர் உட்பட பலர் பிடித "சிகப்பு "கொடி போராட்டம் தோல்வியுற்ற நிலையில் தமிழகத்தில் "சிகப்பு"கலாச்சாரம் பரவுகின்றதாகவும் இதன் பின்னணியில் சீனா போன்ற அன்னிய சக்திகள் இருப்பதாகவும் பெரும் தகவல்கள் கசிகின்றன‌
"இந்தி தெரியாது போடா.."என்பது இந்தியாவுக்கு எதிராக செய்யபடும் அரசியல், மகா முக்கிய நேரத்தில் தமிழகத்தை மோடிக்கு எதிராக திருப்பி செய்யபடும் அரசியல் என்பதை புரிந்தால் நலம்
காட்சிகளை கவனியுங்கள் 1965ல் காஷ்மீரை முன்னிட்டு இந்தியா பாகிஸ்தானுடன் மல்லுகட்டிபொழுது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு என பெரும் கலவரத்தை எற்படுத்தி உலக அரங்கில் இந்தியவினை சிக்கலில் தள்ளிய கட்சி திமுக‌
காஷ்மீருக்காக இந்தியா போராடும்பொழுது "உங்கள் நாட்டில் அடக்குமுறை ஆட்சியா, காஷ்மீரிலும் சண்டை,தமிழ்நாட்டிலும் கலவரம்"என உலகநாடுகள் கேட்க அது ஏதுவாயிற்று
இப்பொழுது 2020ல் சீனபோரிலும் அதே நிலைப்பாட்டை திமுக எடுப்பதை உணர்வது ஒன்றும் தமிழருக்கு சிரமானது அல்ல‌
திமுக எக்காலமும் தேசவிரோத கட்சி என்பதும், ஆபத்து நேரத்தில் நாட்டை சிக்கலுக்குள்ளாக்கும் கட்சி என்பதும் புரிய சிரமமான காரியம் அல்ல‌
இந்த "சிகப்பு"டீசர்ட் கோஷ்டிக்கு ஈரான் மந்திரி பாகிஸ்தானுக்கு சொன்னதைத்தான், சீனா தங்களுக்குகுள் சொல்லி கொள்வதைத்தான் சொல்ல முடியும்
இது "புது"டெல்லி, "புது மாதிரியான'டெல்லி
( அது எப்படி 1965ல் சரியாக கருணாநிதி இந்தியா எல்லையில் போராடும்பொழுது இந்தி எதிர்ப்பு போரை இங்கு நடத்தினார்?
அது எப்படி நேரு பல்கலைகழகத்தில் ரெட் கலர் தெரிந்தாலும் கனிமொழி போகின்றார், தூத்துகுடியில் ரெட் கலர் தெரிந்தால் போகின்றார்
அட இப்பொழுதும் ரெட் கலர் என்றால் அவருக்கென்ன இப்படி ஒரு மகிழ்ச்சி என யாரும் கேட்டுவிட கூடாது
சிகப்புத்தான் அவருக்கு பிடிச்ச கலரு..






Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>