தமிழ்நாட்டில் சட்டம்படித்துவிட்டு சம்பாதிக்கும் ஒரு பய சிறுக்கிக்கூட இவ்வளவு விரிவாக ஆழமாக நுட்பமாக இந்து தர்ம விதிகளை சொல்லக்கூடிய யோக்கிதையே கிடையாது. ஐகோர்ட்டு, ஜூப்பிரீம் கோர்ட்டு கருப்பு க்கோட்டு பிறவிகள் எல்லாம் ஸ்டான்லி ராஜனிடம் வந்து வரிசையில் நில்லுங்க.
ஸ்டான்லி ராஜனின் இந்த கருத்துக்களை படித்தால் நம்ம சுப்ரமணிய ஸ்வாமியே ஆச்சர்யப்படுவார்
மனுதர்மமும் இந்துமதம் சொன்ன தர்மமும் பெண்களுக்கு சொத்து இல்லை என சொன்னது, ராம்சாமிதான் அதை மீட்டார் என ஊளையிடும் கோஷ்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும்
சரி, ராம்சாமி தன் தங்கைக்கு என்ன சொத்து கொடுத்தார்? கொடுத்திருந்தால் வீரமணியிடம் இவ்வளவு சொத்து குவிந்திருக்குமா என கேட்டால் நாம் ஆரிய அடிவருடி
அதில் கருணாநிதி பரவாயில்லை தன் சொத்துக்களை எல்லாம் தன் சகோதரி மக்களோடு பகிர்ந்து கொண்டார், அவ்வகையில் அவர் சரி
அவர் மகன் கூட அப்பா சொத்தான திமுகவினை தன் சகோதரியோடு பங்கு போடுகின்றார் பரவாயில்லை
அதெல்லாம் இருக்கட்டும், உண்மையில் இத்தேசம் பெண்களுக்கு பூர்வீக சொத்தினை மறுத்ததா?
இந்து சமூகம் என்றோ பெண்களுக்கு சம உரிமை என சொல்லியிருந்தது, ஆனால் அன்றிருந்த வாழ்வியல் சூழலில் நிலம் ஆண்மகனுக்கு என்பதால் இன்னொரு குடும்பம் செல்லும் பெண்ணுக்கு நிலத்துக்கு சமமான தங்கமும் மாடும் அணிகலனும் இன்னும் பலவும் கொடுத்துதான் அனுப்பியது.
நிலத்தை பிரித்தால் என்ன வருமோ அதை தங்கமாக கொடுத்துத்தான் அனுப்பியது. அந்த செலவினை தகப்பனோ இல்லை தனயனோ ஏற்பான்
இதுதான் பின்னாளில் வரதட்சணையாக மாறிற்று. எந்த இனத்திலும் இல்லாத இந்த வரதட்சணை முறை இந்து சமூகத்தில் இருப்பதற்கு அந்த பெண்களுக்கு சொத்துரிமையே காரணம்
மற்ற நாடுகளில் வரதட்சனை இல்லை என்றால் ஏன் இல்லை? அவர்களுக்கு நகையும் இல்லை சீரும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை
ஆனால் இத்தேசம் கழுத்து நிறைய நகையும், வண்டி நிறைய பொருளும் அனுப்பித்தான் பெண்களை கொடுத்தது
இதிலே ஒரு வீட்டின் சொத்தில் பாதி தீரும் அல்லது கடனாகும் அல்லது சேமிப்பில் கரையும், எப்படியோ பெண்ணுகுரிய பாகம் அவளுக்கு கிடைத்துவிடுகின்றது
(பெண்களுக்கு சொத்து இல்லை என சொன்னவன் ஐரோப்பியன், 17ம் நூற்றாண்டில் ஒரே மகளான ஆஸ்திரிய இளவரசிக்கு உரிமை இல்லை என சொல்லித்தான் போரே வெடித்து அது சென்னை கோட்டை வரை எதிரொலித்தது.
அதில்தான் கிளைவ் இந்தியாவினையே பிடிக்க தொடங்கினான்)
இந்து சமூகத்தில் பெண்களுக்கு எக்காலமும் எல்லா காலத்திலும் சம உரிமை இருந்தது. ஆண் பிள்ளை இல்லையென்றால் அச்சொத்து அவர்களுக்குள் பகிரபட்டது. ஆண்கள் இருந்தால் அதற்கான தங்கமோ இல்லை மாற்றீடோ கொடுக்கபட்டது
அது இக்காலம் வரை உண்டு
அது மட்டுமா செய்தது இந்து சமூகம், நகையிட்டு தொகையிட்டு மணம் நடத்தி கொடுத்ததோடு அல்லாமல், நிலத்தின் வருமானம் அல்லது பிறந்த வீட்டின் வருமானம் பெண்ணுக்கு சென்றுகொண்டே இருக்க பல வழிவகைகளை செய்தது
பொங்கல் சீர், தீபாவளி சீர், குழந்தை பிறந்தால் தாய்மாமன் கடமை, வளரும் பொழுது கடமை, திருமண கடமை என வாழ்வின் கடைசி காலம் வரை பெண்கள் புகுந்தவீட்டில் இருந்து வாங்கி கொண்டே இருக்க வழிவகை செய்தது
இது வேறு எந்த சமூகத்திலும் இல்லை, இந்து சமூகத்தில் இருந்தது, இன்றும் உண்டு என்றும் உண்டு
கூட்டி கழித்து பார்த்தால் பரமபரை சொத்தில் ஆணின் ஆஸ்தியினை விட பெண் பெற்று செல்வது அதிகம், பெற்று கொண்டே இருப்பதும் அதிகம்
நீதிமன்றம் எந்த தீர்ப்பையும் கொடுக்கட்டும் அது சட்டத்தின் தீர்ப்பு.
ஆனால் தர்மத்தின் தீர்ப்பினை என்றோ எழுதி வைத்தது இந்துமதம். அதன்படி கால காலம் நடக்க அது பலத்த ஏற்பாடுகளையும் என்றோ செய்தும் வைத்தது.
இப்பொழுதும் பரம்பரை சொத்தில் பங்கு கட்டாயம் என்றால் அவளுக்கு வரதட்சனையோ இல்லை வேறு வகை நகைகளோ கொடுக்க கூடாது என நீதிமன்றம் சொல்லவில்லை, சொல்லாது அதற்கு தெரிந்தெல்லாம் சட்டம் ஒன்றே
ஆனால் இந்து தர்மம் நகையும் பணமும் மாடும் இன்னும் பலவும் கொடுத்து பூர்வ சொத்துக்கு வட்டி போல ஆண்டாண்டுக்கு சீரும் கொடுக்க சொன்னது இந்து தர்மம்
ஆம் இன்றைய நீதிமன்ற தீர்ப்பினை விட இந்து மதத்தின் தீர்ப்பு என்றோ உயர்ந்துதான் இருந்தது
பெண்கள் அம்மனாக ஆலயத்தை என் சொத்து என ஆண்டார்கள்
ருத்திரம்மா, மங்கம்மா, அப்பக்கா, ஜான்சி ராணி என எத்தனையோ பெண்கள் தங்கள் உரிமையாக நாட்டை ஆண்டார்கள்
ஆண்டாளும் அவ்வையாரும் தமிழை எம் சொத்து என ஆண்டார்கள்..
அக்காலத்தில் பெண்கள் தான் மணமகனை தேர்ந்தெடுத்தனர், அது சீதை , தமயந்தி காட்சியில் இருந்து கல்லை தூக்கினால்தான் திருமணாம் என சொன்ன கிராமத்து பெண் வரை இருந்தது
அப்பெண்ணுக்கு தன்னால் முடிந்த எல்லா நகை சீரும் முடியாவிட்டால் கடன் வாங்கியாவது சொத்தை விற்றாவது கொடுத்து வழி அனுப்பியது இச்சமூகம்
இங்கு ஒருகாலும் பெண்ணுக்கு சொத்து உரிமை இல்லை என சொல்லமுடியாது, அது வேறுவகைகளில் ஈடாயிற்று
பின்னாளில் அரசுகள் மாறின, இந்திய கலாச்சாரம் அறியா வெள்ளையன் வந்தான். இங்கே இந்த குடும்ப சொத்தின் பிரிவினையே வரதட்சணை என அறியா சில குடும்பங்கள் சமூகத்தை கெடுத்தன
ஆயிரகணக்கான ஆண்டுகள் இங்கு பெண்களுக்கு சம சொத்து உரிமையினை பல வடிவங்களில் கொடுத்த சமூகத்துக்கு , பிழைக்க வந்த அவன் சட்டமெழுதியதெல்லாம் காலத்தின் கோலம்
அவனிடம் ஈரோட்டு ராம்சாமி பெண்களுக்கு சொத்து கொடுக்க சொன்னார் என்பது அதைவிட சோகம்
ராம்சாமி தன் தங்கைக்கு சம சொத்து கொடுத்தாரா என்ற கேள்விக்கெல்லாம் பதிலே வராது, அப்படி கொடுத்திருந்தால் அவர் அறகட்டளைக்கு இவ்வளவு சொத்து வந்திருக்காது
நீதிகட்சி தலைவர் எத்தனைபேர் தங்கள் உடன்பிறந்தாளுக்கு சொத்து கொடுத்தனர் என்றால் தெரியாது
கருணாநிதிக்கு முன்பே அதாவது 1989க்கு முன்பே இங்கு சொத்துரிமை சட்டம் உண்டு, ஆனால் பெண்ணுக்கு நகையிட்டு ஈடு செய்யும் சமூகம் கோர்ட்டு ஏறவில்லை, தர்மபடி நின்றது.
இப்பொழுது தகப்பன் சொத்தில் பெண்ணுக்கு சொத்து கொடுக்க சட்டம் எழுதினார் கருணாநிதி என சில திமுக கும்பல்கள் ஊளையிடுகின்றன, அநேகமாக இது கலைஞர் மகள் செல்வியின் ஆதரவாளர்களாக இருக்கலாம்
ஆம் திமுக கம்பெனியில் அவரின் இன்னொரு மகளான செல்வி என்பவருக்கும் 6ல் ஒரு பங்கு சொத்து உண்டல்லவா?
இன்றும் பூர்விக சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு என சொல்லும் நீதிமன்றம், பெற்றோரை பராமரிப்பதும், பெற்றோர் வாங்கிவைத்த கடனை ஏற்பதும் பெண் பிள்ளைகள் கடமை என சொல்லவில்லை அல்லவா?
அதுதான் சட்டம், தர்மம் கலக்காத சட்டம்.
இந்து தர்மம் செய்ததெல்லாம் அடுத்தவீட்டுக்கு செல்லும் பெண்ணுக்கு பொருளாய் சொத்தில் பாதிக்கு ஈடாக கொடுத்து அனுப்பிவிட்டு , இருக்கும் சொத்தில் தாய் தந்தையினை ஆண்மகன் கவனிக்க சொல்லும் தர்மம் கலந்த சட்டம், ஞானமும் அறிவும் மிக்க சட்டம்
அந்த நுண்ணிய ஏற்பாட்டையும், பெண்ணுக்கு சரிபாதி சொத்துமதிப்புக்கு தங்கமும் பொருளும் கொடுத்து காலம் வரை அவள் தொடர்பில் இருக்க சீர் முறைகளையும் ஏற்படுத்தி தொடர்பற்று போகாமல் சொந்தம் தர்மபடி தொடர்ந்துவர ஏற்பாடு செய்த ஞான சமூகத்தை நினைந்து ஒவ்வொரு இந்துவும் பெருமை கொள்ளுதல் வேண்டும்..