பாரத கண்டத்தில் இமாலயமலைக்கு அடுத்து ரிஷிகளும் மகான்களும் நடமாடிய பூமி தமிழகம். அந்த தொடர்ச்சித்தான் இன்றும் சதுரகிரி, கொல்லிமலை திருவண்ணாமலை என தொடர்ந்து வருகின்றது
அக்காலத்தில் இருந்தே இந்த ஞான பூமிக்கு அரக்கர்களாலும் இன்னும் துஷ்ட சக்திகளாலும் அகங்காரிகளாலும் ஆபத்து வந்தபொழுதெல்லாம் ஒவ்வொரு மகானும் ரிஷியும் வந்து இங்கு அவற்றை அழித்து காத்து நின்றிருக்கின்றார்கள்
இது அகத்தியர் வாழ்விலே உண்டு, அகத்தியரிடம் வீணை இசைத்து தோற்ற ராவணன் தென்னாட்டிலே கால் வைக்க கூடாது என விரட்டபட்டான்
ஆம் ராவணனால் தமிழக பக்கமே வரமுடியாமல் போனது
இதே சாயல் இன்னும் சூரபத்மனை முருகன் அழித்தது முதல் ஏராளமான இடங்களில் உங்களால் காண முடியும், தமிழக பக்கம் அசுர கூட்டம் ஆடிதீர்க்கும் பொழுது தெய்வ சக்திகள் வந்து அழிப்பது காலம் காலமாய் நடந்து கொண்டே இருந்தது
அதர்மங்களை அழிக்க வந்த ராமனும் தென்னகம் வந்திருந்தான் அதுவும் தன் திருமணத்துக்கு முன்பே வந்திருந்தான், அழைத்து வந்தவர் விஸ்வாமித்திர மாமுனி
ஆம் பெரும் அவதாரங்கள் பூமிக்கு தீயவர்களை அழிக்க வரும்பொழுது அவர்களை அழைத்து செல்ல ஒரு சக்தியினை இறைவன் சேர்த்தே பூமிக்கு அனுப்பி வைப்பான்.
அந்த சக்தி மிக அழகாக சரியான நேரத்தில் சரியான இடத்தில் யாரால் எது முடியுமோ அங்கே அவர்களை நிறுத்தி அதர்மத்தை அழிக்கும்
ராமன் காலத்தில் வடக்கே அவனால் அசுர கூட்டம் அழிக்கபட்டாலும் தென்னகத்தில் அசுர ஆட்டம் அதிகமாக இருந்தது அது போக சக்திபெற்ற வானர கூட்ட அதர்மமும் அதிகம் இருந்தது
வரம்பெற்ற அதர்மக்காரனை வரம்பெற்ற நல்லவனே அழிக்கமுடியும் என்பது விதி
மகாபாரத்தில் ஒரு காட்சியினை நுணுக்கமாக நோக்கினால் ஒரு உண்மை புரியும் அது பலம்பெற்ற தீயவர் கூட்டத்தை கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பது
ஆம் முதலிலே பாரத யுத்தம் தொடங்கியிருந்தால் துரியனுடன் கம்சன், ஜெராசந்தன் , சிசுபாலன் என இன்னும் பல பொல்லாத கூட்டம் சேர்ந்திருக்கும் அப்படி சேர்ந்திருந்தால் அதனை அழிப்பது மகா சிரமமாய் இருந்திருக்கும்
இதனாலே ஒவ்வொருவராய் கொன்ற கண்ணன் பின் வனவாசம் என அர்ஜூனனை இழுத்து சென்று மீதியில் பாதியினை கொன்று எஞ்சி இருந்த கொஞ்ச பேரை துரியனோடு சேர்த்து மொத்தமாய் அழித்தான்
அங்கே கண்ணன் என்றால் ராமாயணத்தில் மகா முக்கிய பாத்திரம் வகித்தவர் விஸ்வாமித்திரர்
அவர்தான் ராமனை என் யாகத்துகு பாதுகாப்பு கொடு என பல இடங்களுக்கு அழைத்து சென்று அசுரகூட்டத்தை ஆங்காங்கே ஒழித்தார்
விசுவாமித்திரர் மட்டும் அதை செய்திராவிட்டால் பின்னாளில் ராவணனோடு மாபெரும் அசுர கூட்டம் களத்துக்கு வந்திருக்கும்
ராவணனை அழிக்கும் முன்பே பல பலமான அரசுரர்களை ராமன் அழிக்கும் படி வழி செய்தவர் விஸ்வாமித்திர மகரிஷி
மிக நுட்பமான விஷயம் இது, ஆழ கவனித்தால் அன்றி தெரியாத சூட்ச்சுமம் இது
ஏகபட்ட அசுரர்கள் இப்படி விஸ்வாமித்திரனின் நாடகத்தால் அழிக்கபட்டனர், எல்லாம் அழிந்து ராவணன் எஞ்சியிருந்த பொழுதுதான் ராமனின் திருமணம் நடந்து அதன் பின் வனவாசம் நடந்து அதில் ராவணன் கொல்லபட்டான்
பின்னால் வருவதை முன்னால் அறிபவர்களல்லவா ரிஷிகள்?
இதனால் ராமன் திருமணத்துக்கு முன்பே அவனுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்ய பல அசுரர்களை கொல்ல வழி செய்தார் விஸ்வாமித்திரர்
திருமணத்துக்கு பொழுது ஒரு நாடகத்தை தானே வசிஷ்டர் வழியாக நடத்தி கொண்டு மறைந்தும் கொண்டார்
ஆம் அவர் களத்தில் இருந்திருந்தால் ராமன் கானகம் புகுந்திருக்கமாட்டான், இதை அறிந்தே ஒதுங்கினா அந்த மாமுனி
தாடகை எனும் பெரும் அரக்கி பாண்டி நாட்டில் அதுவும் தென்பாண்டி நாட்டில் இருந்திருக்கின்றாள், பெரும் வல்லமை பெற்ற அரக்கி அவள்
ராமனின் திருமணத்துக்கு முன் தெற்கே பெரும் ஆட்டம் போட்டு கொண்டிருந்தவள், தென்னகத்தில் இருந்த பெரும் அரக்க சக்திகளில் ஒருத்தி அந்த தாடகை.
இன்றும் தென்பாண்டி மக்கள் ஆக்ரோஷமும் கோபமும் கொண்ட பெண்களை தாடகை என்றே அழைப்பார்கள் அந்த அளவு அவள் ஆட்டம் போட்ட பகுதி அது
தாடகையினை அப்படியே விட்டிருந்தால் ராமன் பின்னாளில் தென்னகம் வரும் பொழுது அவளும் ராவணனும் ஓரே அணியில் அசுர கூட்டணியில் வந்திருந்தால் ராவண வதம் நடந்திருக்காது, இவர்க்ளோடு வாலியும் சேர்ந்து கொண்டால் சோலி சுத்தம்
இதை எல்லாம் ஞான திருஷ்டியில் அறிந்த விஸ்வாமித்திர மாமுனி ராமனை அழைத்து கொண்டு தென்னகம் வந்து யாகம் செய்தார்
அதை அழிக்க வந்த தாடகையினை வதம் செய்தான் ராமன்
அதை எல்லாம் மனகண்ணால் ரசித்தபடி ஒன்றும் தெரியாதவர் போல் மாய சிரிப்புடன் எழுந்த விஸ்வாமித்திரர், அப்படியா அவளை அழித்துவிட்டாயா என சொல்லி சக்திவாய்ந்த மந்திரங்களை போதித்தார்
அந்த மந்திரங்கள்தான் வாலிவதத்தில் ராமனுக்கும், இந்திர ஜித்தன் வதத்தில் லட்சுமணனுக்கும் துணையாக நின்றன. அவை இன்றி அவர்களை கொன்றிருக்க முடியாது
தாடகையினை அன்றே அழித்திராவிட்டால் பின்னாளில் அனுமன் சஞ்சீவ மலைக்காக அப்பக்கம் வந்திருக்க முடியாது, அவள் அனுமதிதிருகமாட்டாள், அந்த அபூர்வ மூலிகை இக்கட்டான நேரம் ராமனுக்கு கைகொடுத்திருக்காது
இதை எல்லாம் முன்பே உணர்ந்த குரு அதை தன் சீடனுக்கு சரியாக செய்துவைத்தார்
நிச்சயம் சொல்லலாம் மகாபாரத்தில் கண்ணன் போல ராமயணத்தில் விஸ்வாமித்திரர்
அந்த விஸ்வாமித்திரருக்கு இந்தியாவில் எங்குமே கோவில் கிடையாது, ஒரே ஒரு கோவில் தமிழகம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பக்கம் கூடன் குள அணுவுலையினை ஒட்டி உண்டு அமைந்திருக்கின்றது
விஜயாபதி என அதற்கு பெயர், அங்குதான் விஸ்வாமித்திர மகரிஷிக்கு ஒரு சிறிய கோவில் உண்டு
அது முன்பு பெரும் கோவிலாக இருந்திருக்கின்றது பின் புத்தம் சமணம் கோலோச்சிய காலத்தில் அழிந்திருக்கின்றது
பின் பாண்டியர்கள் காலத்தில் சிறிய கோவில் எழுப்பபட்டு அதுதான் இன்றும் நிலைத்திருக்கின்றது
பாண்டியர்களுக்கு அக்கடலோரம் ஒரு துறைமுகம் இருந்திருக்கின்றது , பெரும் ஊராகத்தான் இருந்திருக்கின்றது அப்பொழுது எழுப்பட்ட கோவில் அது பின்னாளில் ஏதோ கடல் மாறுபாட்டில் அத்துறைமுகம் அழிய அத்தோடு நடமாட்டங்களும் குறைய அந்த இடம் கைவிடபட்டது போல் ஆகிவிட்டது
ஆலயம் மட்டும் நிலைத்திருக்கின்றது.
இன்று அது மிகசிறிய ஆலயமாக நின்றாலும் ராமனின் குருவான விஸ்வாமித்திரருக்கு தனி கோவில் என அது தனித்து நிற்கின்றது
ராமனின் இலங்கை யுத்தம் முதல் பல யுத்தங்களில் அரூபியாய் அங்கிருந்துதான் விஸ்வாமித்திரர் ராமனுக்காய் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் என்கின்றது புராணம்
பொதிகை மலையில் அகத்தியன் போல் இத்தலத்தில் விஸ்வாமித்திரர் என்றும் இருப்பார்
கோவில் உள்ளே விஸ்வாமித்திர மகரிஷிக்கு தனி சிலையும் சன்னிதியும் உண்டு, அதன் அருகே ஒரு கிணறு போன்ற இடம் காணபடுகின்றது
அதுதான் மகரிஷி அமைத்த யாககுண்டம், விஜயாபதி எனும் சொல்லுக்கு வெற்றி கொடுக்கும் இடம் என பொருள்
தாடகையினை அழித்தபொழுது இனி உனக்கு எல்லாம் வெற்றி என விஸ்வாமித்திரர் ராமனை வாழ்த்திய இடமும் அதுவே
இன்றும் பெரும் சிக்கலிலும் பொல்லாதோர் நேருக்கடியிலும் வாடுவோர் அவ்விடம் சென்று வழிபட்டால் அதர்மக்காரர் ஆட்டம் அடங்கும் என்பது ஐதீகம் பலன்பெற்றோர் நிறைய உண்டு
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆலயம் சிறு ஆலயமாக இன்னும் பெயர் தெரியா ஆலயமாக இருப்பது சரியன்று
முதலில் இந்தியாவில் யோகா தினம் போல ரிஷிகளுக்கான தினம் ஒன்று கொண்டாடபட வேண்டும், அந்நாளில் அகத்தியர் முதல் திருவண்ணாமலை ரமண மகரிஷி வரை கொண்டாடபட வேண்டும்
ரிஷிகள் இன்றி இந்துமதம் இல்லை , இந்த மாபெரும் தர்மம் இல்லை, ஆலயம் இல்லை , மந்திரம் இல்லை, வாழ்க்கைமுறை இல்லை, தியானம் இல்லை எதுவுமில்லை
ரிஷிகளே தங்களை வருத்தி இங்கு தர்மம் வாழ்வாங்கு வாழ வழிசெய்த ஞானிகள், அவர்களுகொரு நாள் வைத்து இங்கு கொண்டாடுதல் வேண்டும்
அப்பொழுது தமிழகத்தில் திருவண்ணாமலை கொல்லிமலை சதுரகிரி பொதிகை மலை என எல்லா இடங்களும் சிறப்பிக்கபடும் பொழுது இந்த விஜயாபதியும் கொண்டாடபடும்
அதற்கு முன் ஒரு விஷயம் செய்தாக வேண்டும்
வடக்கே இருந்து தெற்கே வரும் பக்தர்களுக்கு அதாவது ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி கடல் வரை வரும் இந்துக்களுக்கு ராமனின் குரு விஸ்வாமித்திரருக்கு இருக்கும் ஒரே கோவில் பற்றி தெரியடுத்துதல் வேண்டும்
ராமன் ஆலயம் எழும்பும் நேரம் இங்கு ராமனின் குரு ஆலயமும் வெளிவரட்டும்
தெற்கே வரும் வடக்கத்திய பக்தர்கள் மட்டுமல்ல ராமனை நினைத்து வாழும் தென்னக இந்துக்களும் ராமனின் குருவிடம் அடிகடி வந்து வணங்க வேண்டும்
இந்தியாவில் ராமனுக்கு கோவில் எடுக்கும் அதிகார பீடம் ராமனின் குருவுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆலயத்தையும் கணக்கில் எடுத்து அதற்குரிய சிறப்பை கொடுக்கட்டும்
வடக்கே அயோத்தியில் ராமன் ஆலயமும் தெற்கே அவர் குரு விஸ்மாத்திரரின் ஆலயமும் ஒரே கோடாக இணைந்து இத்தேசத்தின் இந்து மாண்பினை ஒற்றுமையினை காத்து நிற்கட்டும், இன்னும் வலு சேர்க்கட்டும்
நிச்சயம் அக்கோவில் பெரும் புகழும் அடையாளமும் பெற்று மேல் எழுந்து ஒளிவீச வேண்டும்
அது பாரதத்துக்கும், சனாதான தர்மத்துக்கும், தேச ஒற்றுமைக்கும், வருங்கால தலைமுறைக்கும் நல்லது, வலுவானது
ரிஷிகள் காரணமின்றி எதையும் செய்யமாட்டார்கள், முக்காலமும் உணர்ந்த அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தொலைதூர திட்டங்கள் உண்டு
அப்படித்தான் அகத்தியனும் விஸ்வாமித்திரரும் தென்னகம் வந்தார்கள் வந்து அமர்ந்து தர்மத்தின் காவலாய் நின்றார்கள்
அவர்களை நாம் கொண்டாட கொண்டாட தமிழகம் ஆன்மீகத்திலும் அறிவிலும் பெரும் வளர்ச்சி எட்டும், மாயைகள் விலகி நற்கதி அடையும்
விஸ்வாமித்திரர் ஆலயத்தை இங்குள்ள சனாதனதர்ம மேலிடங்கள், அமைப்புகள், பெரியவர்கள் கையில் எடுத்து அதற்குரிய மாபெரும் இடத்தை கொடுத்து தர்மம் வளர்க்க வேண்டியது அவர்களின் பெரும் கடமை
அதற்கு வழிகாட்ட அங்கு சென்று வழிபட்டு அம்மகானை உலகறிய செய்வது ராமபக்தர்களின் கடமை, ஒருவகையில் ராமனை உருவாக்கி காத்து நின்றதற்கு நன்றி கடனும் அதுவே..