இலங்கையில் தேடுதல் வேட்டை தீவிரமாகின்றது அதே நேரம் கையெறி குண்டு முதலான ஆயுதங்களுடன் கைது செய்யபடுபவர்களும் அதிகரிக்கின்றனர்
யாழ்ப்பாணம் பக்கம் சில இஸ்லாமியர் நடமாட்டம் சந்தேக கண்ணோடு விசாரிக்கபடுகின்றது, அவர்கள் தாக்குதல் நடத்த வந்தவர்கள் அல்ல மாறாக இந்தியாவுக்கு தப்ப வந்திருக்கலாம் என்கின்றார்கள்
இலங்கை அரசு தேடும் தீவிரவாதிகளில் சில பெண்களும் இருக்கலாம்
ஆம் தலைமன்னார் வந்துவிட்டால் 30 நிமிடங்களில் இந்தியா வந்துவிடலாம்
பாம்பு புற்றை இடிக்க ஆரம்பித்துவிட்டது இலங்கை, தப்பும் விஷ பாம்புகளுக்கு எங்கே புற்று இருக்கும் என தெரியும் அல்லவா? பாம்பின் கால் பாம்பறியும்
அப்படி தமிழகத்து பாம்பு கூடாரங்களுக்கு அவை படையெடுக்கலாம் என்பதால் இந்திய கடல் எல்லை முழு வீச்சில் கண்காணிக்கபடுகின்றது
உளவு விமானம் கப்பல் இன்னும் நவீன கருவிகளோடு கடலில் கண் சிவக்க உச்சகட்ட பாதுகாப்போடு நிற்கின்றது இந்தியா
எங்கே?
தமிழக மீணவர்களை காக்கவில்லை இன்னும் பலரை காக்கவில்லை என இந்த தமிழக அரசியல்வாதிகள் ஒப்பாரி வைப்பார்கள் அல்லவா? அதே எல்லையில்
ஆம் இந்த படுபயங்கர ஆபத்தான நேரத்தில் தமிழகத்துக்கு தக்க பாதுகாப்பினை வழங்குகின்றது இந்தியா
இதைத்தான் முதலிலே சொன்னோம் மீணவர் சிக்கல் வேறு, பாதுகாப்பு என்பது வேறு, பாதுகாப்பில் அரசை துளியும் கைகாட்ட முடியாது
உலகில் வரும் செய்திகளில் இந்திய உளவுதுறைக்கு மவுசு கூடுகின்றது சில மாதங்களுக்கு முன்பே இவர்களோடு தொடர்புடையவனை அமுக்கி மிதித்து விஷயங்களை கறந்தது
ஆம் யாரை கைது செய்தார்கள் என்றால் இன்று தலைமறைவாக இருக்கும் அந்த தவுபிக் அமைப்பின் தலைவனுக்கு பயிற்சி கொடுத்தவனையே அமுக்கியது ரா
அவனே நடக்க போகும் விபரீதத்தை சொன்னான், யார் யார் இலங்கையில் திட்டமிடுகின்றார்கள் என அவன் சொன்ன்னதை அறிக்கை அனுப்பி இலங்கை அரசை எச்சரித்திரிக்கின்றது ரா
யாரின் பெயர்கள் என்றால் இன்று ஐ.எஸ் அறிவித்திருக்கும் அதே பெயர்கள்
அந்த அளவு துல்லியமாக விஷயத்தை அறிந்திருக்கின்றது ரா
ஐஎஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது என பொறுப்பேற்றாலும் சிறீலங்கா தவுபிக் ஜமாத் எனும் தன் நண்பர்கள் மூலமே செய்திருக்கின்றது அல்லது ஐ.எஸ் அமைப்பிடம் சிலர் மூலமாக வெடிபொருள் பெற்று இவர்கள் செய்திருக்கின்றார்கள்
யாரை எங்கு பிடித்தீர்கள், எங்கு வைத்திருக்கின்றீர்கள், இவர்கள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என ராவிடம் கேட்டால் அது சொல்லவேண்டிய விஷயமுமல்ல, அது அவசியமுமல்ல என மவுனசிரிப்பு சிரிக்கின்றது ரா
ஆம் இலங்கை காட்சியின் மிக முக்கிய துருப்பு சீட்டான அந்த பயிற்சியாளர் ராவின் பிடியில்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன , ஆனால் ரா உடனே ஒப்பு கொள்ளாது அவனை கொடுக்கவும் செய்யாது
ஏன் என்றால் அப்படித்தான், அதுதான் உளவு அமைப்புகள்
இலங்கையில் பாம்பு புற்றில் கைவைத்தாகிவிட்டது, தப்பும் பாம்புகளை இங்கே உள்ளே விடாதபடி இந்திய படைகள் காவல் இருக்கின்றன
தமிழரும் அப்படியே கொஞ்சம் உஷாராக இருத்தல் வேண்டும்
இங்கு திராவிடம் பெரியாரியம் அம்பேத்கரியம் தலித்தியம் சாதியம் இன்னும் ஏராளமான இம்சை இசங்கள் உண்டு
அவைகளால் இந்த இடத்தில் துளியும் பிரயோசனமில்லை, ஏகபட்ட கட்சிகளும் இம்சைகளும் இருக்கலாம்
ஆனால் அவை எல்லாம் நம்மை காக்காது, இது உலகளாவிய சிக்கல்
இந்திய பாதுகாப்பு அமைப்பும் அதன் அதிகாரிகளும் வீரர்களும் அரசுமே நம்மை காக்கமுடியும், அவர்களுக்கு நம் ஒத்துழைப்பும் அவசியம்