ஸ்டாலின் அவர்களே,
அரசியல் உலகில் உங்கள் முகவரி "ஸ்டாலின் S/O M. கருணாநிதி"மட்டுமே. இதை நீங்களே பெருமையாக சொல்லிக் கொண்டதுதான். இந்த "S/O M. கருணாநிதி"ங்கிற அட்ரஸ் இல்லைனா உங்க நிலைமை என்னென்னு யோசிச்சு பாருங்க.
அரசியல் உலகில் உங்கள் முகவரி "ஸ்டாலின் S/O M. கருணாநிதி"மட்டுமே. இதை நீங்களே பெருமையாக சொல்லிக் கொண்டதுதான். இந்த "S/O M. கருணாநிதி"ங்கிற அட்ரஸ் இல்லைனா உங்க நிலைமை என்னென்னு யோசிச்சு பாருங்க.
அதாவது நீங்க மேனேஜ்மென்ட் கோட்டா வில் அரசியலுக்கு வந்தவர்ன்னு சொல்ல வர்றேன்.
அதெல்லாம் இல்லை, "உழைத்து meritல் அரசியலுக்கு வந்தவன் நான்"என்று நீங்கள் சொன்னால் உங்கள் சகோதரி கனிமொழி (இன்னொரு மேனேஜ்மென்ட் கோட்டா அரசியல்வாதி) கூட நம்ப மாட்டார். பொதுவாக இந்த மேனேஜ்மென்ட் கோட்டால படிக்க வந்தவனுகளுக்கு பக்கபலம், பின்புலம்ன்னு நிறைய சப்போர்ட் இருக்கும். அதனால ஒரு திமிர் இருக்கும். படிப்பு/தொழில் திறமை மட்டும் இருக்காது
இந்த தமிழ்நாட்டுக்கு நீங்களும், இந்தியாவுக்கு ராகுல் காந்தியும் மேனேஜ்மென்ட் கோட்டா அரசியல்வாதி எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு நல்ல (கெட்ட) உதாரணங்கள்.
நீங்க ரெண்டு பேரும் மேனேஜ்மென்ட் கோட்டா அரசியல்வாதிகள். அரசியலை குடும்ப தொழிலாக செய்பவர்கள். உங்களுக்கு லாப நஷ்ட கணக்கு முக்கியம், தொழிலில். உங்கள் சம்பாத்யத்துக்கு பங்கம் வர நேரிட்டால் அதை சரி கட்ட எல்லா வில்லத்தனமும் செய்யத் தெரியும்.
அதுல ஒரு கள்ளத்தன டெக்னிக் தான் நல்லவனுக்கு "களவாணி"பட்டம் கட்டுறது. என்ன ஒற்றுமை பாருங்க உங்க ரெண்டு பேருக்கும்! அவரு ஹிந்தில "chor"கிறார் நீங்க களவாணிங்குறீங்க .
நம்ம வோல்டுலய ஊழல் செஞ்சதுக்காக, அதாவது களவாணித்தனம் செஞ்சதுக்காக, டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே அரசு உங்க அப்பாரு CMஆ இருந்த திமுக அரசு. அது தவிர திகார் ஜெயில்ல சிங்கிளா, ஊழல் வழக்குல மாட்டி, மாசக்கணக்குல இருந்தவுங்க உங்க தங்கச்சி. அப்புறம் உங்க உற்றார் உறவினர் சொந்த பந்தம் மேலயும் ஊழல் கேஸ் இருக்குங்க ஸ்டாலின். உங்க அம்மா (கலைஞர் TV) மேலயும் ஒரு கேஸ் இருக்குன்னு நினைக்கிறேன்.
27000 கோடி ரூபாய ஆட்டயப்போட்டு உங்க ஆளு ஒருத்தர் இலங்கையில முதலீடு செஞ்சிருக்கிறாராம். ஏதுங்க இவ்வளவு காசு? உங்களுக்கு தெரியாம களவாணித்தனம் செஞ்சாரா? இல்லை கூட்டு களவாணித்தனம் செஞ்சு சேர்த்தீங்களா?
இந்த களவாணித்தனமெல்லாம் செஞ்சுபுட்டு எப்படி வாய் கூசாம அவரை பாத்து களவாணிங்குறீங்க?
500 ரூபாய்க்கு சிவப்பு சட்டை வாங்கி போட்டுட்டு ஊர்வலம் போனா நீங்கெல்லாம் தொழிலாளிகளின் காவலரா? என்னங்க ஸ்டாலின்? இதெல்லாம் MGR சினிமா டெக்னிக் இல்லையா? இன்னமுமா இந்த அரத பழசான டெக்னிக்க யூஸ் பண்ணுவீங்க?
கடைசியா ஒன்னு சொல்றேன். மேனேஜ்மென்ட் கோட்டா அரசியல்வாதி உங்களுக்கே இவ்வளவு அதுப்புனா மெரிட்ல வந்த அரசியல்வாதி அவரு.
அவருக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும்?
அவருக்கு எவ்வளவு அதுப்பு இருக்கும்?
அர்த்தமாயிந்தா?
-ச. சண்முகநாதன்