Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

யாரிந்த லாட்டரி மார்ட்டின் ..?

$
0
0
கதை கேளு கதை கேளு
களவாணி கதை கேளு
கோவையில் இருப்பவர்கள், அல்லது கோவைக்கு புதிதாக வருபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களிடம் அல்லது டீக்கடைக் காரர்களிடம் ஒரே கேள்வியைக் கேளுங்கள் “யாருங்க மார்ட்டின்?”
கதை கதையாக சத்தமில்லாமல் சொல்வார்கள். பெரும்பாலும் அனைவருமே சொல்வது “அவரு லாட்டரி சீட்டு வித்துட்டு ஆறாம் நம்பர்ல இருந்தாருங்க, சின்ன போர்டு, அலுமினிய கிளிப் வெச்சு லாட்டரி வித்தவருங்க, இப்போ கோயமுத்தூரே அவருதுங்க”
யார் இவர்? எங்கிருந்து வந்தார்?
இயற்பெயர் சான் டியாகோ மார்ட்டின். இந்தப் பெயரை விட ‘லாட்டரி மார்ட்டின்‘ என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
மார்ட்டின் பிறந்த அன்றே யோகம் தான். ஆம் தோழர்களே… பர்மாவில் சான்டியாகோ மார்ட்டின் பிறந்த அன்றே, மாட்டினின் பெற்றோர்களுக்கு லாட்டரியில் 1000 டாலர் விழுந்தது. இதை சொல்லிச் சொல்லியே வளர்த்ததனால் மார்ட்டினுக்கு லாட்டரி மீது தீராத காதல் உருவாகி, லாட்டரி சாம்ராஜ்யத்தையே கட்ட வைத்தது.
பர்மாவில் யாங்கோன் நகரில் தனது தொழிலை துவக்கினார். அங்கே சிறிய அளவில் லாட்டரி டிக்கட்டுகளின் ஏஜென்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பர்மாவில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுகள் பெரும் அரசியல் சூறாவளியைக் கிளப்ப, மார்ட்டின் தப்பித்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அஸ்ஸாம், நாகாலாந்து, போன்ற அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார்.
சில வருடங்கள் கழித்து தனது மொத்த சாம்ராஜ்யத்தையும், தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். மார்ட்டினின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கட்டமைத்ததில் பின்னாளில் அவருக்கு எதிரியான உஸ்மான் பயாஸ் பெரும் பங்கு வகிக்ககிறார். கோவை மாவட்டத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் மார்ட்டின்.
அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கம் லாட்டரிகளை தடை செய்ததும், மார்ட்டினுக்கு பின்னடைவு என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்தத் தடையே, மார்ட்டினை வளம் கொழிக்க வைத்தது.
ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய் அளவில் கள்ள லாட்டரிகளை விற்கிறார். அதைக் கொண்டு ஊரெல்லாம் சொத்துக்கள் வாங்கினாலும் அந்தப் பேராசை ஆட்டுவித்தது மார்ட்டினை.
1990 முதல் 2003 வரையிலான காலத்தில் லாட்டரி தடை செய்யப் படாமல் இருந்த பொழுது, சேலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மார்டினிடம் இருந்து மொத்தமாக லாட்டரிச் சீட்டுகளை வாங்கி கொண்டிருந்தார். இவ்வாறு லாட்டரிச் சீட்டுக்களை வாங்குவதற்கு உத்தரவாதமாக ஒரு பெரும் தொகையை மார்ட்டின் கேட்கிறார். பாலாஜியிடம் பெரும் தொகை இல்லாததால், சேலம் அக்ரஹாரம், எண் 42ல் உள்ள கட்டிடத்திற்கு பவர் ஆப் அட்டார்னி எழுதித் தருகிறார்கள்.
இவரைப் போலவே லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருந்த பாலாஜியின் தங்கையின் கணவரும் அவரது சொத்துக்கான பவர் ஆப் அட்டார்னியை எழுதித் தருகின்றனர். இதெல்லாம் நடந்தது 2000ம் ஆண்டில்.
இதற்குப் பிறகு, தமிழக அரசு லாட்டரிகளை தடை செய்ததால், பாலாஜி தனது வியாபாரத்தை கர்நாடகத்திற்கு மாற்றிக் கொள்கிறார். மார்ட்டினுக்கு கொடுக்க வேண்டிய அத்தனை நிலுவைகளையும் கொடுத்த பின், தான் அளித்த பவர் ஆப் அட்டார்னி பத்திரத் திருப்பித் தருமாறு கேட்கிறார்.
மார்ட்டின் ‘இதோ, அதோ‘ என்று இழுத்தடிக்கிறார். இவனிடம் எப்படி இந்தப் பத்திரத்தை வாங்குவது என்று பாலாஜி முழித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று 13.10.2010 அன்று, ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல், யுனிவர்சல் செல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் நுழைந்து, அடாவடியாக அந்நிறுவனத்தை காலி செய்தது.
என்னடா இது என்று பாலாஜி விபரங்களை விசாரித்தால், 2009ம் ஆண்டில் 50 லட்ச ரூபாய்க்கு மார்ட்டின் அந்த சொத்தை சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அடுத்த நடவடிக்கையை பாலாஜி எடுப்பதற்குள் சரசரவென்று காட்சிகள் அரங்கேறின. பெரிய திரையை போட்டு மூடி, கட்டிடம் இடிக்கப் படத் தொடங்கியது.
அதிர்ந்து போன பாலாஜி, சேலம் சிவில் கோர்ட்டில் தடையாணை கேட்டு வழக்கு ஒன்றை தொடர்கிறார். சேலம் மாநகர காவல் ஆணையாளரிடமும், நகர காவல் நிலையத்திலும் புகார் ஒன்றை தொடுக்கிறார்.
கருணாநிதியே மார்ட்டினோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் போது, மார்ட்டின் மீது எஃப்ஐஆர் போட, சேலம் மாநகர காவல் ஆணையாளர் என்ன பைத்தியமா ?
எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், வேறு வழியின்றி பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார்.
சென்னை உயர்நீதிமன்றம், மார்ட்டின் மீதும், அந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கை திறம்பட வாதாடி மார்ட்டினுக்கு பொங்கல் பரிசு வழங்கிய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.
மார்ட்னின் செல்வாக்கு போகாத இடங்களே இல்லை எனலாம். மார்ட்டினின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான தேசாபிமானி என்று ஒரு நாளிதழ் வருகிறது. நம் தமிழ்நாட்டில் தீக்கதிர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். 2005ம் ஆண்டில் மார்ட்டின் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுக் கொண்டது தேசாபிமானி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷயம் வெளியே வந்து சர்ச்சை ஆனதும், தேசாபிமானி, அந்தத் தொகையை மார்ட்டினிடம் திருப்பி அளித்தது.
மார்ட்டினின் நிறுவனத்தில் உஸ்மான் பயாஸ் என்ற நாம் ஏற்கெனவே பார்த்த ஒரு நபர் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை உருவாக்குகிறார். தமிழகத்தில் மார்ட்டினின் சட்டவிரோத கள்ள லாட்டரிகள் தாறுமாறாக விற்கத் தொடங்குகின்றன.
இப்படியே இயல்பாக போய்க் கொண்டிருந்த மார்ட்டினின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். மார்ட்டினின் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஸ்மான் பயாஸ், ஒரு பெரும் தொகையை ஆட்டையை போட்டு விட்டு, மார்ட்டினிடமிருந்து பிரிகிறார். பிரிந்தவுடன், மார்ட்டின் தனது பண பலத்தால் பயாஸூக்கு நெருக்கடி தருகிறார். ஏற்கனவே, பல்வேறு அரசியல் தொடர்புகளோடு இருந்த பயாஸ், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாகிறார். பயாஸ் மீது மார்ட்டின் கடும் கோபத்தில் இருக்கிறார்.
பயாஸுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று மார்ட்டின் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தமிழகத்தில் மார்ட்டினின் கள்ள லாட்டரிகள் விற்கும் இடங்களில் காவல்துறை சோதனையிட பயாஸ் ஏற்பாடு செய்கிறார்.
தொடர்ந்து சோதனைகள் நடந்ததும், மார்ட்டினின் கள்ள லாட்டரித் தொழில் அடி வாங்குகிறது. பணம் நஷ்டமாகிறது.
அரசியல் தொடர்புகள் அனைத்துக்கும், பயாஸையே நம்பி இருந்த மார்ட்டின் அரசியல் தொடர்புகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை நம்பி தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முயல்கிறார். மார்ட்டின் முதலில் அணுகியது, கருணாநிதியின் மகள் செல்வி. செல்வியோடு தொடர்பு ஏற்பட்டாலும், மார்ட்டினால் காவல்துறையின் சோதனைகளை நிறுத்த முடியவில்லை
அப்போதுதான், மார்ட்டினுக்கு கவிஞர் பா.விஜயின் நட்பு கிடைக்கிறது. பா.விஜய்யை அணுகிய மார்ட்டின் தனது கோரிக்கையை சொல்கிறார். அதற்கு பா.விஜய், நான் கருணாநிதியிடம் அழைத்துச் செல்கிறேன். தேவையான உதவிகளைச் செய்கிறேன், இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்.
மார்ட்டின் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றதும், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்னை ஹீரோவாக வைத்து, கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரியுங்கள், நான் உங்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
மார்ட்டின் சம்மதித்ததும், அறிவிப்போடு நின்று விட்ட இளைஞன் படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்படி உருவானதுதான் இளைஞன்.
கருணாநிதி, தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டு அளித்த அறிக்கையில், ‘தற்போது தயாரிக்கப் பட்டு வரும் இளைஞன் படத்துக்கு கதை வசனம் எழுதுவதற்காக எனக்கு அளிக்கப் பட்ட ஊதியம் 45 லட்சம் ரூபாய்‘ என்றார். இந்த 45 லட்ச ரூபாயும் கதை வசனத்திற்கு அளித்த ஊதியம் அல்ல….. கள்ள லாட்டரி விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கொடுத்த லஞ்சம்.
இதை இப்ப ஏன் சொல்றேன்னா இந்த மார்டின் பினாமி தான் திருமுருகன் காந்தி எங்கிற திருட்டு டேனியல் காந்தி.
Venkat Srini
Via Babu Sabapathi

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>