இலங்கையில் இனி முடியாது என்பதால், தனித் தமிழீழத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முயலும் பிளான், LTTEயினரிடம் இருப்பதாக அந்தத் தகவல் சொல்கிறது..!
நினைத்தாலே நம் ஈரக்குலை நடுங்க வேண்டிய செய்தி இது..! ஆனால் இதை எந்த தமிழகத் தலைவரும் சீரியஸாகப் பேசவில்லை..! எந்தத் தமிழ் டிவி சேனலும் இதை விவாதிக்கவில்லை..!
LTTEயினருக்கும் இங்கே இருக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் 1980கள் வரையில் அப்படி ஒரு திட்டம் இருந்தது. பிரிவினைவாத திமுகவின் ஆதரவும் இருந்தது. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கஞ்சா contraband விஷயங்கள் கடத்தப்படுவதன் மூலமாகவே விடுதலைப்புலிகளுக்கு ஏகப்பட்ட பணம் குவிந்தது.
ஆனால், ஜெயலலிதா இந்த விஷத்தை இங்கே வளர விடவில்லை; பயங்கரவாதிகளின் பணத்தை அவர் விரும்பவில்லை; அதை ஊழல் செய்தே சம்பாதிக்கலாம் என்று நினைத்தார். அந்த வரையில் தமிழகத்தில் பயங்கரவாதம் வளராமல் போனது ஒரு வகையில் நமக்கு நல்லதானது..!
ஆனால் ஜெயலலிதா இறந்த உடன்... திமுக மறுபடியும் துளிர்த்தவுடன்... பிரிவினைவாதம் இங்கே மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது..! இந்த அயோக்கியக் கூட்டத்தை தமிழகத்தில் வேரறுக்க முடியாததன் காரணம் : திராவிடர் கழகம், தமிழகத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தேசிய எதிர்ப்புணர்வும், இந்துமத எதிர்ப்புணர்வும், தமிழ் இளைஞர்களை போராளிகள் என்று உருப்படாமல் அடித்து வைத்திருப்பதும், இதையெல்லாம் உணராத தமிழர்கள் நம் முட்டாள்தனமும்தான்..!
LTTE யினரிடம் பெரும் பணம் இன்னும் எங்கேயோ இருக்கிறது ; அது திராவிடர் கழகம் மூலமாக தமிழகத்திற்குள் பாய்கிறது. வேலையற்ற உருப்படாதவர்கள், அயோக்கியர்கள், திருடர்கள், போராளிகள், பொறுக்கிகள் இவர்கள் எல்லோருக்கும் பணம் வரும் ரூட் : திராவிடர் கழகம்.
இலங்கைத் தமிழ் பயங்கரவாதக் கூட்டம் + தமிழக போராளிகள் தீவிரவாதக் கூட்டம் - இந்த காம்போவால் தமிழகத்திற்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது..! திமுக தன் குடும்ப செழுமைக்காக தமிழகத்தைக் காவு கொடுக்க யோசிக்காது என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போதிருக்கும் அதிமுகவும் பணம் என்றால் வாயைப் பிளக்கும் பிணம்தான். தன் அப்பாவைக் கொன்ற தீவிரவாதிகளின் ஏஜெண்ட்டுகள் என்று தெரிந்தும் கூட்டு வைத்த ராகுல், தமிழகத்தைப் பற்றியா கவலைப்படுவார்..?
எனில், பயங்கரவாதிகள் காத்துக் கொண்டிருப்பது : மத்தியில் பிஜேபி அல்லாத, ஸ்திரமற்ற ஒரு ஆட்சிக்காக..! தமிழகத்தில் திமுக ஆட்சி என்றால் பிரிவினைவாதிகளுக்கு இன்னும் கொண்டாட்டம்..! அப்புறம் என்ன..? பயங்கரவாத வெடி விளையாட்டுகள் தமிழகத்தில் ஆரம்பமாகும்..! ஏற்கனவே உருப்படாமல் போயிருக்கும் தமிழக இளைய சமுதாயம் சீரழிந்து போகும்..! தமிழகம் பெரிய சுடுகாடாகும்..!