Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

வெளியே வா..... படித்ததும் பகிர்ந்தேன் ..,

$
0
0
நெஞ்சை உருக்கிய நிகழ்வு...
""""""""""""""""""""""""""""""""""
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து நம் இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி ...
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு..
மதிய உணவு தயார்.. சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது...எனக்கு பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போ னேன்..
ஏன்...சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்.. அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவாக இருக்கும்
ஆமாம்..உண்மை.
இதை கேட்ட பொழுது.... மனது மிகவும் வலித்தது...உடனே
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்...நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளை பிடித்து குலுக்கி, இது ஒரு மிகப்பெரிய கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..
விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...
இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..
காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்...
இந்த இளம் வீரர்கள் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு..தன்னடைய உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை பாது காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள்
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடுவதுடன் அவர்களை தெய்வங்களாகவும் பூஜிப்பதுடன்.அவர்களுக்காக கோயில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றர்கள்..என்பது
மிகுந்த வேதனை...
கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்...மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது....
எம் தேசத்து என் இளைஞனே..என் சகோதரனே...
நம் தேச நலன் காக்க
வெளியே வா.....
படித்ததும் பகிர்ந்தேன் ..,
ஜெய் ஹிந்த் *

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>