சங்கர் ராஜரெத்தினம் பதிவு
பல வருடங்களுக்கு முன், என் நண்பன் ஒரு நாள் என்னிடம் : "என் தம்பிக்கு ரேஷன் கடைல வேலை வாங்கித் தர 25 லட்சம் லஞ்சம் கேக்கறாங்கப்பா..!"
நான் கேட்டேன் : "ரேஷன் கடை வேலை அவ்ளோ பெரிய வேலையா..? அதுக்கு எதுக்குடா அவ்ளோ லஞ்சம்..?"
அவன் சொன்னான் : "ஹா ஹா ஹா..! 'எக்கச்சக்க'வரும்படிடா அதுல..!"
ரேஷன் கடையில் ஏழை மக்களுக்கு சகாய விலையில் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்பதால்தான், அரசாங்கம், குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்கிறது. அந்த காரணத்துக்காகத்தான், அது விவசாயிகளுக்கு மானியங்கள், கடன் தள்ளுபடிகள், இன்கம்டாக்ஸ் தள்ளுபடி என்று பல சலுகைகள் கொடுக்கிறது. அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மிகப்பெரிய பகுதி ஒதுக்கப்படுகிறது..!
அவ்வளவு செலவு செய்து கொள்ளும் ரேஷன் பொருட்களின் மொத்த பயன், ஏழைகளுக்குச் சேராமல், பெரும்பகுதி அயோக்கியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான் போகிறது என்ற உண்மை நம் எல்லோருக்கும் தெரியும்..! ஆனாலும் எல்லோரும் வாய்மூடிக் கிடக்கிறோம்..! நம் நாட்டில், 'ஏழை'அல்லது 'விவசாயி'என்ற லேபிள் ஒட்டி, எந்த அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம்..!
ஒரு உதாரணம் : நீங்கள் தமிழகத்தில் ஒரு பகுதியில் இருக்கிறீர்கள். இங்கே உங்களுக்கு ரேஷன் கார்டு. சில நாட்களில் நீங்கள் வேறு ஒரு பகுதிக்குப் போகிறீர்கள். அங்கே வேற ரேஷன் கார்டு வாங்க வேண்டும்..! இங்கே இருந்த ரேஷன் கார்ட்..? அது அப்படியே இருக்கும்..! அதில் யாரோ சாமான்கள் வாங்குவார்..! அவை வெளிமார்க்கெட் போய் அதிக விலைக்கு விற்கப்படும்..! இது போன்ற பல தகிடுதித்தங்கள் மூலம் ரேஷனில் அடிக்கப்படும் கொள்ளை பல லட்சம் கோடி..! அவை எல்லாம் மானியங்களுக்கென நாம் கட்டும் வரிகள்தான்..! நம் பணம் நம் கண் முன்னேயே கொள்ளையடிக்கப்படுகிறது..!
'ஓரே நாடு ஒரே ரேஷன் கார்ட்..'என்று வந்துவிட்டால், கார்டு வழங்குவதில் முறைகேடுகள் இருக்காது..! ஆதார்/ PANனோடு இணைக்கப்பட்டால், வசதியானவர்கள், ஏழைகளுக்கான கார்ட் பெற முடியாது..! Gas சப்சிடிக்கு ஆதார் இணைத்து, பேங்கில் செலுத்திய ஒன்றிலேயே, அதுவரை மானியமாய் வீணாகிக் கொண்டிருந்த பல கோடிகள் தப்பித்தது..!
'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு..'திட்டத்தால், இதுவரை அரசியல் திருடர்கள் பாக்கெட்டுக்குப் போன பல லட்ச கோடிகள் மக்கள் நமக்கு சேமிப்பாகும்..!
'இது மாநில விஷயமாச்சே.. இதில் எப்படி மத்திய அரசு தலையிடலாம்..?'என்று கேட்பவர்களுக்கு : இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் தரப்படும் உணவு மானியங்களில் மத்திய அரசின் பங்கு உண்டு..! அதனால், அதை முறைப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு..!
'ஓரே நாடு ஒரே ரேஷன் கார்ட்..'திட்டத்தை எதிர்ப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை விளக்கவும் வேண்டுமா..? வீட்டுக் கதவுகளுக்கு பூட்டு போடுவதை திருடர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்..!
எக்கச்சக்கமாய் குடும்ப சொத்து சேர்த்தவர்கள், ஏர்வேஸ் கம்பெனி வைத்திருப்பவர்கள், பண்ணைநிலங்கள், பங்களாக்கள் ஏகப்பட்டது வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு வங்கிகளில் கோடிகோடியாய் பணம் வைத்திருப்பவர்கள் - இவர்கள் எல்லாம் 'அய்யோ... ஏழை... பாவம்..!'என்று பேசினால், அதன் பின்னால் இருப்பது அயோக்கிய சுரண்டல் என்பதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம்..!