அடேய் உலக நிலவரம் தெரியவில்லை என்றால் ஒதுங்கி நில்லுங்கள்
அரேபியாவின் மொத்த எண்ணெயும் ரஷ்யாவின் கால்வாசி எண்ணெய்க்கு வராது
நெப்போலியனும் ஹிட்லரும் அதை குறிவைத்துத்தான் ரஷ்யா மேல் பாய்ந்தார்கள், ஆம் அவர்கள் குறி ரஷ்ய எண்ணெய்
அந்த ரஷ்ய எண்ணெய் சந்தையினை உடைக்கத்தான் அரபு நாடுகளில் அவ்வளவு பாய்ச்சலை ஐரோப்பா காட்டியது, இஸ்ரேலின் இருப்பு அதில்தான் சாத்தியமானது
கச்சா எண்ணெய்க்கு இந்தியா முழுவதும் அரபுநாடுகளை நம்பி இருப்பதும் சரியல்ல
நாளையே ஏ இந்துத்வா இந்தியாவே உனக்கு ஒரு ஸ்பூன் பெட்ரோல் தரமாட்டோம் என அவர்கள் மிரட்டும் நிலைவரலாம்
ஆம் நம்மை அல்ல, 1970களில் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளுக்கு எல்லாம் ஸிரின்ஞ் அளவு கூட பெட்ரோல் தரமட்டோம் என அவை அடம்பிடித்தன
ஜப்பானும் ஐரோப்பாவும் இன்னும் பல நாடுகளும் பாதிக்கபட்டன
"ஆஹான்.. அப்படியா? இனி உங்களை விட்டால் பார்ப்போமா.."என அமெரிக்கா அரேபியாவில் வந்து இரண்டு கால் இரு கை எல்லாம் வைத்து அமர்ந்திருப்பது அதன் பின்புதான்
ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், சவுதி, ஈராக்,சிரியா என அமெரிக்க முகாம்கள் வலுவாக அமைந்தது அதன் பின்புதான்
பாகிஸ்தான், ஆப்கன் முகாம்கள் அவர்கள் பேக் அப்
அம் ஏற்கனவே எண்ணெய் வைத்து மிரட்டி வசமாக சிக்கிகொண்ட நாடுகள் அவை
அதே மிரட்டலை இந்தியா மேலும் தொடுக்கலாம், நாமும் அவர்களுக்கு அடிமையாய் சிக்க நேரிடலாம்
எல்லா விஷயத்திலும் மாற்றுவழி தேவை
இனி அவர்கள் ஏதும் சொன்னால் போங்கடா டேய் "எங்களுக்கு ரஷ்ய எண்ணெய் வரும் பார்க்கின்றாயா? கப்பல் பீட்டர்பஸ்பர்க் போகும், விலாடிஸ்டொவ் போகும் நீ உன் எண்ணையில் பஜ்ஜி சுட்டு சாப்பிடு போடா"என தில்லாக மிரட்டலாம்
ரஷ்யா என்பது ஆயுதம் மட்டுமல்ல பெட்ரோலும் விளையும் பூமி
இந்த அரசின் கணக்குகளும் தேர்வுகளும் வித்தியாசமானவை, சுதந்திர இந்தியாவில் தலைகீழ் திருப்ப்பம் கொடுப்பவை
புரியாவிட்டால் விட்டுவிடுங்கள்
ஆனால் ஆழகவனித்தால் ஆச்சரியமான வியூகமும் பெரும் தொலைநோக்கும் அதில் ஒளிந்திருக்கும்
நாம் அதைத்தான் ரசிக்க்கின்றோம் உங்களோடு பகிரிகின்றோம்
இதனால் நாம் ஸ்டான்லி ராஜன் அல்ல சங்கி ராஜன் என அழைக்கபட்டாலும் சிக்கல் இல்லை
சீன பாஷையில் "சாங் இ"என்றால் மகா நல்லவன் என பொருள் வருமாம், கொரிய பாஷையில் நல்ல பார்வையாளன் என் பொருள் வருமாம்
அதனால் நாம் "சாங் இ"என்றே இருந்துவிட்டு போகின்றோம்
ஸ்டான்லி ராஜன்