ரஷியாவுக்கு ரூ.7,200 கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவிலே பணமில்லை, இதில் ரஷ்யாவுக்கு ஏன் கடன் என பல குரல்கள் வந்தாயிற்று
யாரும் யாருக்கும் சல்லிகாசு சும்மா கொடுக்கமாட்டார்கள், தனி மனிதன்முதல் அரசு வரை அது இயல்பு
இலங்கைக்கு இந்தியா கடன் கொடுத்தால் திரிகோணமலையில் சுமார் 300 ஏக்கர் இந்தியாவிடம் உண்டு, மால்த்தீவுக்கு கொடுத்தால் அறிவிக்கபடா ராணுவ தளம் ரகசிய தளம் அதாவது சிக்னல் இன்டலிஜென்ஸ் எனும் ஆளில்லா தளம் உண்டு
ஆப்கனுக்கு கொடுத்தால் அங்கிருந்து பலுசிஸ்தானை எட்டி பார்க்க முடியும்
ஆம் நாம் இவ்வளவுதான் பொதுதளத்தில் சொல்லமுடியும்
ஆப்கனில் இந்தியா கொட்டும் பணம் ஒன்றும் இனாம் அல்ல, மிக சரியான கணக்கு, சல்லி பைசா வீணாக்காமல் பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டமுடிகின்றது
ரஷ்யாவில் இந்தியா ஏதோ செய்ய திட்டமிடுகின்றது அதுவும் சீன எல்லையினை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யாவின் இந்தியா கால்பதித்தால் இரு முனைகளில் சீனாவுக்கு தொல்லை கொடுக்க முடியும்
சீனா சுற்றியிருக்கும் எல்லா நாட்டுடனும் வம்பு செய்யும் நாடு எனும் வகையில் ரஷ்யாவுடன் அதற்கு வம்பு உண்டு
மிக நீண்ட எல்லையினை அந்நாடு ரஷ்யாவுடனேதான் பகிர்கின்றது
ஒரு பக்கம் கடலாலும் மறுபக்கம் ரஷ்யாவாலும் சூழபட்ட நாடு சைனா
மிக தேர்ந்த திட்டத்துடன் இந்தியா ரஷ்யாவுக்கு நலதிட்டம் எனும் பெயரில் கால் வைக்கின்றது
ஆம் , இதோ பணம் கஷ்டபடும் ரஷ்யர்களுக்கு உதவுங்கள் என இந்தியா புட்டீனிடம் அதை கொடுக்க போவதில்லை
மாறாக ஏதோ ஒரு திட்டத்தை இந்தியா அங்கு அமல்படுத்தும் ரஷ்யா அதை அனுமதிக்கும் அதில் இந்திய நலன் மட்டுமே இருக்கும் அதே நேரம் ரஷ்யாவுக்கு எதிரான விஷயம் இருக்காது
இருந்து பாருங்கள், சாலை துறைமுகம் பொது கட்டமைப்பு விமான நிலையம் என்ற முகமூடியில் சீனாவின் கிழக்கு எல்லையில் அதற்கு செக் வைக்க போகின்றது இந்தியா
சீனாவின் ஜென்ம பகையாளியான ஜப்பானுடனும் ரஷ்ய சீன முச்சந்தியில் இந்தியாவால் இனி நிற்க முடியும்
மிக அட்டகாசமான ராஜதந்திர நகர்வு இது
கேந்திர மற்றும் ராணுவ விவகாரங்களிலும் சர்வதேச நகர்வுகளிலும் உங்களுக்கு பரீட்சயம் இருந்தால் எழுந்து நின்று கைதட்டுவீர்கள்
வடக்கே சிக்கிம் , காஷ்மீரின் அக்சாய் சின் இலங்கை அம்பந்தோட்டா, பாகிஸ்தானின் குவெட்டா என 3 இடங்களில் இந்தியாவினை சுற்றி ஆணி அடிக்கின்றது சைனா
இந்தியா வியட்நாமினை தொடர்ந்து சீனாவின் கிழக்கு எல்லையில் ஆணி அடிப்பை தொடங்கிவிட்டது
நிச்சயம் வியந்து வாழ்த்தவேண்டிய விஷயமது
மாறாக திராவிடம், பெரியார்,சமூக நீதி என புலம்பிகொண்டிருக்கும் பிரிவினைவாத கோஷ்டி தமிழனுக்கே ஜட்டி இல்லை ரஷ்யணுக்கு கோவணமா என கிளம்புவார்கள்
அவர்கள் அப்படித்தான், எதுவுமே தெரியாது தெரிந்தாலும் மறைப்பார்கள்
தேசநலன் என எதுவுமில்லை மாறாக எல்லாவற்றிலும் அரசியல் செய்வது அவர்கள் ஸ்டைல் அல்லது தொழில்
இதெல்லாம் உலக ராஜதந்திர நடைமுறை, இந்தியா அதைத்தான் செய்கின்றது
ஸ்டான்லி ராஜன்