நாங்களெல்லாம் சர்.சிவி ராமனையும், ராமனுஜனையும் பெருமையாக தமிழன் என சொல்லிகொள்ளும் மான உணர்வுமிக்க தமிழர்கள், ஆனால் சிவன் தன்னை இந்தியனென சொல்லிவிட்டார்: அய்யய்யோ கோஷ்டிகள்
அந்த ராமானுஜத்தின் செருப்பினை தேடிகொண்டிருக்கின்றேன்
சர்.சிவி ராமன் பெயராலும், ராமானுஜன் பெயராலும் இங்கு என்ன உண்டு?
மாபெரும் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் சாதித்த தமிழர்களாக அவர்களுக்கு திராவிட அரசு கொடுத்த மரியாதை என்ன?
அண்ணா பெயரில் பல்கலைகழகம் முதல் கழிவறை வரை உண்டு
கும்பகோணத்தில் ராமானுஜம் பெயரில் கல் கூட கிடையாது, ஆனால் சுதந்திர போராட்ட தியாகியும் மகளிர் விடுதலைக்கு பாடுபட்ட சந்தியபாபாவுக்கு நினைவு சின்னம் உண்டு
பெரியாருக்கு ஊரெல்லாம் சிலைகள், அண்ணாவுக்கு அந்த சிலை நோக்கி ரோடுகள்
சர்.சிவி ராமனுக்கும், ராமானுஜத்துக்கும் தமிழராய் என்ன செய்தீர்கள்?
அவர்களுக்கு ஒரு சிலை? அவர்கள் பெயரில் ஒரு கல்லூரி? குறைந்தபட்சம் ஒரு விருது?
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை
பிராமணர் என்பதர்காக அவர்களை ஒதுக்கி வைத்தீர்கள்
அட அந்த கலாம் என்பவருக்கு என்ன செய்தீர்கள்? ஒரு மரியாதை? ஏதாவது ஒன்று?
இன்று அவர்கள் தமிழர்களாம், இவர்கள் பெருமைபடுகின்றார்களாம்
இவர்களை எல்லாம் முக ஸ்டாலினின் தமிழை கேட்க வைத்தே கொல்ல வேண்டும்
ஸ்டான்லி ராஜன்