ஸ்டான்லி ராஜன்..
அண்ணா அண்ணா என அக்கோஷ்டி சொல்லி அவர் திராவிடத்தை வாழவைத்தார், தமிழனை தலை நிமிர வைத்தார் என ஏக அழிச்சாட்டியம்
அண்ணாவுக்கு குழந்தை இல்லை,
அக்காவின் பேரபிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தார், அக்கா பிள்ளைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் கருணாநிதி அவரிடம்தான் கற்றார்
4 பேரை தத்தெடுத்து வளர்த்தார் அண்ணா, அவர்கள் யாருமே அடையாளமில்லை, பரிமளம் என்பவரும் பல நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொண்டார், காரணம் அவருக்கு ஆதரவாய் யாருமில்லை.
அண்ணாவின் மனைவி ராணி அம்மையார், ஆம் திராவிட கழக தலைவர்களுக்கெல்லாம் சோறும் காப்பியும் பலகாரமுமாய் சமைத்து போட்ட பெண்மணி மிக வறுமையில் சிரமபட்டார்
ராமசந்திரனும் ஜெயாவுமே அவருக்கு ஆறுதலாய் இருந்தனர்
ஆம் அண்ணாவின் குடும்பத்தையே வறுமையில் தள்ளி அவர்கள் தற்கொலை செய்யும்பொழுதும் கண்டு கொள்ளாமல் இருந்த கட்சி அது
அண்ணாவின் குடும்பத்து வாரிசு என யாரையாவது திமுகவில் கண்டதுண்டா?
அட பதவியினை விடுங்கள், வட்ட செயலாளர் இடத்திலாவது உண்டா? இவ்வளவுக்கும் அண்ணா இல்லையென்றால் திமுகவே இல்லை..
கட்சி தலைவன் குடும்பத்தையே ஏறேடுத்து பார்க்கா அளவு சுயநலம் மிகுந்த கட்சி திமுக
அந்த கட்சித்தான் தமிழகத்தை வாழவைத்ததாம் , இன்னும் வாழவைக்குமாம்
வாழவச்சதெல்லாம் போதுமடா...