Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

எங்கோ போகும் L P G சிலிண்டர்கள்.

$
0
0




எண்ணெய் எரிவாயு நிறுவனங்களுக்கு [ IOC, HPCL and BPCL ] மானிய விலையில் மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைசெய்வதால் Rs 43,000 கோடிகள் இழப்பு ஏற்படலாம் என்ற மத்திய அரசு கவலை பட்டு பட்டு உடம்புக்கு வந்தே விட்டது பாவம். அதனால்தான் இனிமேல் பொது மக்களுக்கு வருடத்துக்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே. மேலும் தேவை எனில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் போலும். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் கூட்டம் எல்லாம் அரசின் அணைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மானிய விலையில் மக்களுக்கு கிடைக்கும் பொருள்களிலும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி சுரண்டியே உடம்பு வளர்கின்றனர் என்பதுதான் தெளிவு. 



பெட்ரோலியம் அமைச்சர் ஜெயபால் ரெட்டி எரிவாயு சிலிண்டர்களின் பயன்பாடு பற்றி ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க போக. அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் போன கதையாக முடிந்தது. உள்ளே உள்ள சகல விபரங்களும் வெளியில் வந்து சிரிப்பாய் சிரிகிறது. 

காங்கிரஸ் எம் .பி யும் தொழில் அதிபருமான நவீன் ஜிண்டால் பயன்படுத்திய மானிய விலை சிலிண்டர்கள் சென்ற ஒரு வருடத்துக்கு மட்டும்
சத்தியமாக 369 சிலிண்டர்கள்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி 170 சிலிண்டர்கள்.
உத்திர பிரதேசம் மாயாவதி 91 மானிய விலை சிலிண்டர்கள் பயன்படுத்தியுள்ளார் சென்ற ஒரு வருடம் மட்டும் அதனால் அரசுக்கு இழப்பு  Rs 31,318 
முன்னாள் பஞ்சாப் DGP  KPS கில் - 79 சிலிண்டர்கள். மானிய விலையின் மூலம் அரசுக்கு இழப்பு  Rs 27,189
வெளி உறவு துறை அமைச்சர் ப்ரநீத் கவுர் 77 சிலிண்டர்கள். மானிய விலையின் மூலம் அரசுக்கு இழப்பு  Rs 26,501.
spectrum புகழ் அ.ராசா திகார் ஜெயிலில் இருந்தபோது மட்டுமே  அவரது வீட்டில் 77 சிலிண்டர்கள். 
சுப்ரீம்  கோர்ட்டின் முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் 60  சிலிண்டர்கள்.
ஆனால் கேபினட் அமைச்சர்கள் சிலர் மிதமாகவே பயன்படுத்தியுள்ளனர்.

பிரபுல் படேல் 41 சிலிண்டர்கள் மட்டும்.
சரத் பவார் வெறும் 33 சிலிண்டர்கள் மட்டுமே.
சல்மான் குர்ஷித் 62 சிலிண்டர்கள்.
பி.ஜே.பி. நிதின் கத்காரி 35 சிலிண்டர்கள்.
வெங்கைய்யா நாயுடு 33 சிலிண்டர்கள்.

காசு கொழிக்கும் கார்பொரெட் நிறுவன தலைவர்கள் மட்டும் விட்டு வைப்பார்களா? 

ரான் பாக்க்ஷி  மருந்து நிறுவன தலைவர் பாய் மோகன் சிங் 52 சிலிண்டர்கள்.
பென்னட் கோல்மன் நிறுவனத்தலைவர் சமீர் ஜெயின் 39 சிலிண்டர்கள்.
பாரதி ஏர் டெல் சுனில் மிட்டல் 27 சிலிண்டர்கள்.

உண்மையில் இன்னமும் நிறைய பெரும் புள்ளிகள், அவர்களின் உபயோகங்கள் மயாமாய் மறைந்துவிட்டன.

சாதரணமாக ஒரு சிலிண்டர் பெற்ற பின்னர் அடுத்த 21 நாட்கள் ஆனா பிறகே மறு சிலண்டர் கேட்டு விண்ணப்பிக்க இயலும்.அப்படி கணக்கிட்டால் ஒரு வருடத்துக்கு நீங்களோ அல்லது நானோ வெறும் 18 சிலிண்டர்கள் மட்டுமே அதிக பட்சம் வாங்க முடியும்.

பெட்ரோலியம் அமைச்சரகம் இந்த விஷயத்தில் விதிகள் ஒன்றும் மீறப்படவில்லை என அப்பட்டமாக புளுகி தள்ளுகிறது. யாரோ எப்போதோ ஆரம்பித்து வாய்த்த வி.ஐ.பி. கலாச்சாரம் தான் இது போன்ற அல்ப தனங்கள் வளர்ந்து பெருக ஆதாரம்.

எண்ணெய் நிறுவனங்கள்  நஷ்டத்தில் இருபதாக சொல்லி சொல்லியே மாதா மாதம் டீஸல், பெட்ரோல் மற்றும் எரி வாயு விலைகளை உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு, பொருளாதார மேதை - மன்மோகன் சிங் அவர்களுக்கும் கூட மேற்கண்ட இந்த உண்மைகள் மட்டும் தெரியாது என்று நாம் அனைவரும் நம்பலாம். 






Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>