"நேருவினை ஏன் எதிர்த்தீர்கள்?
அவர் திராவிட உரிமையினை பறித்தார்?
காமராஜரை ஏன் விரட்டினீர்கள்?
அவர் தேசியவாதி, தமிழுக்கும் தமிழருக்கும் ஒன்றும் செய்யவில்லை
இந்திராவினை ஏன் அடித்தீர்கள்?
அவர் தமிழரின் உணர்வினை புரிந்துகொள்ள்வில்லை
பின்பு ஏன் காலில் விழுந்தீர்கள்?
அப்பொழுது அரசியல் நெருக்கடி,அதெல்லாம் தந்திரம்
ராஜிவினை ஏன் வெறுத்தீர்கள்?
அவர் இலங்கைக்கு படை அனுப்பினார்
சரி சோனியாவிடம் ஏன் சரணடைந்தீர்கள்?
அவர் சொக்கதங்கம், மணிமேகலை
எப்படி உங்களுக்கு பதவியினை அள்ளி தந்த அட்சயபாத்திரம் என்பதாலா?
அதிகம் பேசாதே, இதெல்லாம் தமிழகத்துக்காக எங்களுக்கு அல்ல
சரி பதவியில் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்?
வரலாற்றை புரட்டிபார் தெரியும்
புரட்டிவிட்டேன் ஒன்றும் தெரியவில்லை, சன்டிவி வளர்ந்த கதையும் கலைஞர் டிவி உருவான கதையும் மட்டுமே தெரிகின்றது
நீ பாஜக அடிவருடி, மானமில்லா பிண்டம்
சரி பதில் சொல் மசூதியினை இடித்த பாஜகவுடன் ஏன் ஆட்சிகட்டிலில் அன்று ஏறினீர்கள்
அது நாட்டுபற்று , இன்னொரு தேர்தலை தேசம் தாங்காது என்பதால்
அவ்வளவு நாட்டுபற்று இப்பொழுது எங்கே போனது?
அது டெல்லியில் இருக்கும் அரசியல் நிலையினை பொறுத்தே எங்களுக்கு வரும்
இப்பொழுது என்ன பிரச்சினை?
எல்லாமே பிரச்சினை, நீட் வேண்டாம், நீட்டாதது வேண்டாம் இன்னும் நிறைய வேண்டாம்
உங்கள் கோரிக்கைதானே காங்கிரஸின் கோரிக்கை, தேர்தல் அறிக்கையிலும் அதுதானே இருந்தது
ஆம்
காங்கிரஸ் தோற்றால் என்ன அர்த்தம்? இந்தியா முழுக்க நீட்டை ஏற்றுகொண்டதாகதானே அர்த்தம்? நீங்கள் மட்டும் ஏன் குதிக்கின்றீர்கள்
இங்கே மருத்துவ கல்லூரி அதிகம், அதில் வடவன் எப்படி வரமுடியும்?
உண்மையினை சொல், தனியார் மருத்துவகல்லூரி பாதிக்கபடும் என்றுதானே குதிக்கின்றாய்?
ம்ம் இல்லை
அப்படியானால் தனியார் மருத்துவகல்லூரி அரசு மயமாக்கபடும் அதன் பின் நீட் ஒழிக்கபடும் என சத்தமாக சொல் பார்க்கலாம்
ம்ம்ம் மாட்டேன்
மோடி மேல் என்ன பெரும் குறை கண்டாய் ஒன்றை சொல்
ம்ம்ம் சர்வாதிகாரம், மாட்டுகறி , மதவெறி இன்னும் ஏராளம் தூத்துகுடி சாவுக்கு கூட மோடி மவுனம், அவர் மதவெறியர், தமிழ் எறியர்
சஞ்சய் காலம் படித்திருக்கின்றாயா? மிசா கொடுமை தெரியுமா
ஆம், அதெல்லாம் பழங்கதை
ஆக அடுத்த ஐந்தாண்டு காலம் கழித்து மோடி உங்களுக்கு பதவி வழங்கினால் இன்று திட்டுவதும் பழம் கதை ஆகுமல்லவா?
அதெல்லாம் காலம் முடிவு செய்யும்
செய்யட்டும், ஆனால் இந்தியா ஒன்று முடிவு செய்துவிட்டது
என்ன?
அகில இந்திய தலைவர்களை உங்களுக்கு ஒரு காலமும் பிடிக்காது, உங்களுக்கு பதவி பிச்சை கொடுத்தால் கம்மென்று இருப்பீர்கள், இல்லை என்றால் கத்துவீர்கள்
இது எங்களுக்காக அல்ல, தமிழ்நாட்டுக்கு
தமிழ்நாட்டின் மாபெரும் மத்திய அரசு திட்டங்கள் நீங்கள் பதவியில் இல்லாதபொழுதுதான் கிடைத்திருக்கின்றது தெரியுமா?
திராவிட எதிர்களுடன் நாங்கள் பேசுவதில்லை நீ கிளம்பலாம்
கிளம்புகின்றேன், உங்கள் சின்னம் என்ன?
தெரியாதா உதய சூரியன்
அதை மாற்றி நரிகுட்டி என மாற்றுங்கள் பொருத்தமாக இருக்கும்.."