இந்த பாஜக பிரமுகர் எச்.ராசா பற்றி சில திராவிட குஞ்சுகள் கத்தி கொண்டே இருக்கும், அதாவது அவர் ஷர்மா எனும் வடநாட்டு பார்ப்பானின் வாரிசு, பிழைக்க வந்த பார்ப்பான் என ஏக அழிச்சாட்டியம் செய்யும்
நாம் நாயன்மார்களில் படிக்கின்றோம், சண்டிகேஸ்வர நாயனாரின் இயற்பெயர் விசார சர்மா, அப்படியே திருநெல்வேலி என பெயர் வர காரணமான சிவனடியார் பெயர் வேத சர்மா
ஆம், வேத சர்மா என்பவர்தான் நெல்லை பிச்சையெடுத்து அரிசியாக்கி அந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றுக்கு படைத்து வந்தார், ஒரு நாள் அவரின் நெல் மழையால் வீணாகும் ஆபத்து இருந்தபொழுதுதான் அங்கு இறைவன் வந்து நெல்லுக்கு வேலியிட்டு காத்தார்
அன்றிலிருந்து அந்த இடம் திருநெல்வேலி ஆயிற்று
இது முற்கால பாண்டியருக்கும் முந்தைய காலம் என்றால் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையான காலம், ஆக அப்பொழுதே சர்மா எனும் அந்தண இனம் இங்கே இருந்திருக்கின்றது
அது சேக்கிழார் காலத்திலும் தொடர்ந்திருக்கின்றது, இந்த திராவிட இம்சைகள் சொல்வதெல்லாம் சுத்த பொய் என்பது நன்றாக விளங்குகின்றது
ஆக பாஜக எச்.ராஜாவினை யாரும் ஷர்மா ஒரு வந்தேறி என இனி சொல்லமுடியாது, ஆதாரம் தமிழ் சைவ இலக்கியங்களிலே இருக்கின்றது
அது இருக்கட்டும்
திருநெல்வேலிபற்றி படிக்க படிக்க அது சுவாரஸ்யமாக இருக்கின்றது, அகத்தியர் அங்கு இருந்துதான் கயிலை திருமணத்தை தன் கண்களால் கண்டிருக்கின்றார்
வேதசர்மாவுக்கு அங்குதான் நெல்லுக்கு வேலி இடபட்டிருக்கின்றது
இன்னும் இராமர்கோன் எனும் சிறுவனுக்கு வேணு எனும் மூங்கில்காட்டில் இறைவன் தன்னை வெளிகாட்டியிருக்கின்றார்
இன்னும் யாரெல்லாமோ வருகின்றார்கள், அம்மாவாசை சித்தர் முதல் பலர் வருகின்றார்கள்
மிக சிறந்த அற்புத சன்னதிகளும், ஒவ்வொரு சன்னதிக்கும் மகா அற்புத வரலாறும் கொண்ட அந்த ஆலயம் ஆசியாவின் மிகபெரிய ஆலயங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை
அந்த ஆலயம் சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய நாட்டு ராஜ ராஜன் புகழை தாங்கி நிற்கின்றது, அங்கிருக்கும் கல்வெட்டுகள் அதைத்தான் சொல்கின்றன
சுந்தரபாண்டியன் ராஜராஜனுக்கு நூறு வருடம் முந்தையவன், அவன் காலத்தில் பாண்டிய நாடு உச்சத்தில் இருந்திருக்கின்றது
சுந்தரபாண்டியன் சோழன் தலையினை வெட்டிய கல்வெட்டு இன்றும் நெல்லையப்பர் ஆலயத்தில் உண்டு, தமிழகத்தின் தனிபெரும் அரசனாக அவன் விளங்கியிருக்கின்றான்
அவன் காலத்தில் நெல்லையப்பர் ஆலயம் மிக பெரிதாக மிக மிக பரந்துவிரிந்த கற்றளியாக அன்றே உருவாக்கபட்டிருக்கின்றது, பின்னால் வந்தவர்கள் இன்னும் வலுபடுத்தியிருக்கின்றார்கள்
சுந்தரபாண்டியன் காலத்தில் அடங்கி இருந்த சோழ நாடு பின் பராந்தக சோழன் காலத்தில் தலையெடுத்து அப்பொழுதுதான் ஆதித்த கரிகாலன் எல்லாம் எழும்பி மறுபடி பாண்டிய நாட்டில் புகுந்து சுந்தரபாண்டியனின் வாரிசான இன்னொரு பாண்டியன் தலைவெட்டி பழிதீர்த்திருக்கின்றான்
பின் ஆதித்த கரிகாலனை பாண்டிநாடும் சேரநாடும் சேர்ந்து பழிதீர்த்திருகின்றன
அதன் பின் ஆட்சிக்கு வந்த ராஜராஜன் பாண்டியரின் கூட்டாளியான சேர நாட்டை குறிவைத்து அடித்து அவர்களின் பலமான காந்தளூர் சாலை எனும் ஊரையே தரைமட்டமாக்கினான்
இதன் பின் சோழ சாம்ராஜ்யம் தனிபெரும் சக்தியாய் எழும்பி அவன் தஞ்சை கோவிலையும் கட்டிவைத்துவிட்டு சென்றுவிட்டான்
ஆனால் சோழனின் ஆலயம் கலைக்கு உன்னதம் கட்டகலைக்கு ஆச்சரியமே தவிர சுந்தர பாண்டியனின் நெல்லையப்பர் கோவிலின் அமைப்பும் அதன் பலவகை வரலாற்றுக்கும் அருகே வரமுடியாது
ஐந்து சபைகளையும் கொண்டு தனிபெரும் கயிலாயம் போல் மிக பிரமாண்ட ஆலயம் அது
அழகான கற்சிலைகளும், மிக நுனுக்கமான இசைபாடும் தூண்களும் அந்த பாண்டியனின் ஆலயத்தில் மிக சிறந்த கலை நுணுக்கங்கள், மிக மிக உன்னத அறிவின் அடையாளங்கள்.
பாண்டியரிலும் ஏகபட்ட புழக்பெற்ற மன்னர் இருந்தார்கள் , மதுரையில் இருந்து இமயம் வரை கொடிபறக்க விட்டார்கள்
நெல்லைக்கு தனி கவனம் எடுத்த சிவனடியார் பாண்டியர்கள் சிலரே, அதில் சுந்தரபாண்டியன் முக்கியமானவன்
அவனின் மிகபெரும் கனவு அந்த ஆலயம், அவனின் மிகபெரும் அர்பணிப்பாலே அது இன்று மிகபெரிய ஆலயமாக மிகபெரும் தேருடனும் கம்பீரமாக வரலாற்றில் நிற்கின்றது
ஆனால் அந்த சுந்தரபாண்டியனுக்கு சிலையும் கிடையாது, குருபூஜையும் கிடையாது
காலம் வழிவிட்டால் அந்த நெல்லை கோவிலின் அனைத்து கல்வெட்டுகளையும் படித்து பாண்டிய மாமன்னன் சுந்தரபாண்டியனின் பெரும் வரலாற்றை வெளி கொணர வேண்டும்
நெல்லை கோவில் முன் அவனுக்கொரு சிலையும் குருபூஜையும் நடத்தபட வேண்டும்
இது ஒன்றும் ஆச்சரியமல்ல, புரட்டுமல்ல
தஞ்சை கோவிலை கட்டியவன் ராஜராஜன் என்பதையே ஒரு ஜெர்மானியனே படித்து சொன்னான், கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அதை உறுதிபடுத்தின
பின் கல்கியும், சாண்டில்யனும், பாலகுமாரனும் அதை வளர்தெடுத்தார்கள்
சோழநாடு கொடுத்து வைத்தது அப்படியான ஆட்கள் கிடைத்தார்கள்
அருமை நாட்டில் ஒன்று பாரதி போல் அதி புத்திசாலி கிடைத்தார்கள் இல்லை பிரபல தீவிரவாதி "நெல்லை கண்ணன்"போன்றவர்கள் வந்தார்கள்
ஒன்று மாபெரும் அறிவு இன்னொன்று தலைகீழ் வவ்வால்
இந்நிலையில் மிகபெரிய சிவனடியார் அரசனின் வரலாறு தாமிரபரணி கரையோரம் தூங்குகின்றது, அப்படியே தூங்குகின்றது
அதை வெளிகொண்டுவந்து அங்கு அவனுக்கான பெரும் சிலையும் கொண்டாட்டமும் நடத்தபடல் வேண்டும்
இன்றும் திருநெல்வேலி ஆலயத்தில் இருக்கும் அந்த மீன் முத்திரை மட்டும் பாண்டிய அரசையும் சுந்தர பாண்டியனின் சிவ பக்தியினையும் சொல்லி கொண்டே இருக்கிறது
ஒருவிஷயம் கவனிக்கின்றோம்
காஷ்மீர் பனிகுகை முதல் கன்னியாகுமரி வரை எங்கு திரும்பினாலும் சிவலிங்கமும் அதன் வழிபாடுமாகவே இருக்கின்றது என்பது எதை சொல்கின்றது
இந்நாடு என்றுமே ஒரு இந்து நாடு என்பதையும் பாரத கண்டம் முழுதும் இந்துக்களால் நிரம்பியது என்பதையும் தெளிவாக சொல்கின்றது
இதை மீறியும் எவனாவது தமிழனுக்கு மதமில்லை தமிழன் இந்தியனில்லை என சொல்வான் என்றால் அவனை மனநல மருத்துவமனையில் சேர்க்காமலே கொன்றுவிடுதல் நலம், காரணம் குணமாக வாய்ப்பே இல்லை
நாம் நெல்லையின் வரலாற்றை தேடுகின்றோம்
நாயன்மார்களே முடியவில்லை
இதில் கரிகால் சோழனை தேடி, வீரபாண்டியனை தேடி இன்னும் யார் யாரையெல்லாமோ தேடி.. எப்பொழுது முடியுமோ தெரியாது
முடிந்தவரை தேடுவோம், ஓடி ஓடி தேடுவோம், நம் காலம் முடியும் பொழுது இன்னும் சிலர் வந்து அவ்வழியில் தேடுவார்கள் உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளிவரும்
நெல்லையின் மகா அத்தியாவசிய தேவை அந்த சுந்தரபாண்டியன் வரலாற்றை கண்டறிந்து அவனுக்கோர் சிலை அமைத்து கொண்டாடுவது