இந்துமதம் பெண்ணடிமைதனம் கொண்டது என சொல்லும் கும்பலை நோக்கி பரிதாபமாக பார்க்கின்றோம்
ஆம் ராமாயணம், மகாபாரதம் என பெண்களே இயக்கிய காவியங்களில்ல்லாம் இந்து தர்மம் கொடுத்த பெண் உரிமை பட்டவர்த்தனமாக தெரியும்
சீதா, பாஞ்சாலி, கைகேயி,காந்தாரி உட்பட ஏகபட்ட பெண்களே அந்த கதைகளின் நாயகிகள், அவர்களின்றி கதையே இல்லை
இப்பொழுது நாயன்மார் வரலாற்றினைக் வாசித்து கொண்டிருக்கின்றேன், நாயன்மார்கள் 63 பேரில் 3 பேர் பெண்கள்
மீதி 60 பேரில் பாதிபேர் வாழ்வில் பெண்களே சரிபாதியாக பக்தியில் நாயன்மார்களுக்கு துணை நின்றிருக்கின்றனர்
அது இயற்பகை நாயனார், மானகஞ்சாய நாயனார், அறிவாட்டய நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட நாயனார், சிறுதொண்ட நாயனார், அப்பூதி அடிகள் நாயனார், இளையான்குடி மாற நாயனார், என பட்டியல் நீள்கின்றது
ஆம் இந்துமதம் பெண்கள் ஆண்கள் என பிரித்து பார்த்த சமூகம் அல்ல, அடியார்க்கு இணையாக அடியாளும் கொண்டாடபட்டிருக்கின்றாள்
நரகாசுரன் கதை முதல் பல அசுரவதங்கள் பெண்கள் கையாலே நடந்ததை இச்சமூகம் சொல்லி பெண்ணுக்கான பெரும் மரியாதையினை சொல்லியிருக்கின்றது
இறைவனில் பாதி பெண் என சொல்லி, தெய்வங்களும் பெண்கள் இன்றி பலமோடு இருக்காது என சொல்லி பெண்ணின் துணை கொண்டே ஒரு ஆண் முழுமையடைவான் என சொன்ன மதம் இந்து தர்மம்
இதை வேறு எந்த நாட்டு கலாச்சாரம் சொன்னது?
ஆண்டாளும் மீராவும் கொடுத்த இலக்கியங்களுக்கும் பக்திக்கும் நிகராக அந்நிய மதத்திலும் கலாச்சாரத்திலும் எந்த பெண்ணை காட்ட முடியும்?
ஒரு வாதத்துக்கு சொல்கின்றேன், இது ஒரு வாதமே
பைபிளில் ஆபிரஹாம் மகனை பலியிட சென்றான் ஆனால் மனைவிக்கு தெரியாமலே பலியிட சென்றான், அங்கு பெண் ஒதுக்கி வைக்கபட்டாள்
ஆனால் சிறுதொண்ட நாயனார் கதையில் அந்த மனைவி கணவனுக்காக மகனையே வெட்டி சமைத்து படையலிட்டாள்
எது உன்னத பக்தி? எது பரிபூரண பக்தி? பெண்ணை இணைத்து கொண்ட தர்மம் எது
எம்மால் எம் பண்பாட்டில் 3 பெண் நாயன்மார் முதல் ஆண்டாள் மீரா என பலரை காட்டமுடியும், இறைவனின் தனி அருள் பெற்ற அவ்வையார் முதல் பல பெண்களை காட்ட முடியும்
ஆனால் அப்போஸ்தலராக, இறைவாக்கினராக ஒரு பெண்ணை உங்களால் காட்ட முடியுமா?
எம்மால் ருத்திரம்மா முதல் நாச்சியார், மங்கம்மா என பல அரசிகளை காட்ட முடியும், அந்நிய கலாச்சாரத்தில் அப்படி ஒரு பெண்ணை காட்ட முடியுமா?
எங்கே இருந்தது பெண்ணடிமைதனம்? எங்கே இருந்தது பெண் உரிமை?
நிச்சயமாக இந்து தர்மமே பக்தி முதல் ஆட்சி, இலக்கியம் என எல்லாவற்றிலும் பெண்ணுக்கான சம உரிமையினை கொடுத்து காத்தும் நின்றது
இதையெல்லாம் ஒரு சிங்கமும் சொல்லாது, சிறுத்தை சொல்லாது, புலியும் சொல்லாது, சொன்னால் அவர்களுக்குள்ள மாமிசம் கிடைக்காது
ஆம் அவர்களெல்லாம் சிங்கமுமல, சிறுத்தையுமல்ல் மாறாக வாய்பிளந்து நிற்கும் ஓநாய்கள், வஞ்சக நரிகள், பிணத்துக்காய் வட்டமிடும் கழுகுகள், சாணத்தில் உழலும் வண்டுகள்