இன்றையதேதிக்கு ஒரு பயலுக்கும் இந்த பரிதி மார் கலைஞர்- சூரிய நாராயண சாஸ்திரி பற்றி ஒன்றுமே தெரிய வாய்பில்லை. திராவிட த்திருட்டுக்கும்பல்கள் தமிழ் வளர்த்த லட்சணம் அப்படி. காசுக்காவே வாழும் இந்த கும்பல்களை மக்கள் இன்னமும் சரியாக புரிந்துகொள்ளத்தான் இல்லை.
பிராமணர்களுக்கு தமிழ்பற்று இல்லை, தமிழ் விரோதிகள் என்பதெல்லாம் இங்கு வெறுப்பு அரசியல் அதில் வாக்கு வாங்கும் அயோக்கிய அரசியல்
அந்த உ.வே சாமிநாத அய்யரும், பாரதியும் இன்னும் பல பிராமணர்களும் தமிழ் வளர்த்த அளவு இன்னொருவர் வளர்க்க முடியாது
அப்படிபட்ட பிராமண வரிசையில் ஒருவர்தான் பரிதிமாற் கலைஞர், தமிழ் செம்மொழி என முதலில் முழங்கியவர் அவர்தான்.1903ல் அவர் சொன்னதுதான் 100 வருடம் கழித்து தமிழ் செம்மொழி ஆனது
அவரின் இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி அது வடமொழி என்பதால் அதற்கு மிக சரியான பெயராக பரிதிமாற் கலைஞர் என மாற்றிகொண்டு தமிழராக நின்றார்
இப்பொழுதெல்லாம் சைமன் என்பதை சீமான் என மாற்றி தமிழரறிஞர் ஆகிவிடுகின்றார்கள் என்பதெல்லாம் வேறு விஷயம்
சாஸ்திரி எனும் சொல்லுக்கு சாதி அடையாளமின்றி கலைஞர் என தமிழ்படுத்தியவர் அவர்
தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு கொஞ்சமல்ல, ஏராளமான நூல்களை எழுதினார், 10 நூல்களை எழுதினார் பல நூல்களை புதுப்பித்தார்
இவ்வளவிற்கும் அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள் மட்டுமே
பாரதியினை விட குறைவாக வாழ்ந்த அந்த தமிழறிஞர் தமிழுக்கு செய்த தொண்டு அளப்பறியது
அவருக்கு இன்று நினைவு நாள், தமிழ் உலகம் மறக்க முடியா அந்த பரிதிமாற் கலைஞருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
இந்த பரிதிமாற் கலைஞர் வழியில் ஒரு தமிழ்பெயரை வடமொழிக்கு மாற்றுங்கள், ஒரு விஷயம் புலபடும்
ஆம் கலைஞர் கருணாநிதி என்பதை வடமொழிக்கு மாற்றுக்கள் அது "சாஸ்திரி கருணாநிதி"என்றாகும், அதுதான் சரி
ஆனால் எந்த சாஸ்திரத்தில் அவர் நிபுணத்துவம் என்றால் யாருக்கும் தெரியாது என்பதுதான் திராவிட சோகம்
கருணாநிதி என்பது வடமொழி பெயரே தமிழ்பெயர் "அன்பு செல்வம்"என்றுதான் வரும்,
இனி பாஜகவினர் சமஸ்கிருதத்தில் கலைஞர் கருணாநிதியினை "சாஸ்திரி கருணாநிதி"என அழைத்தாலும் திமுகவினரால் ஒன்றும் சொல்ல முடியாது
ஆக "சாஸ்திரி கருணாநிதி"நடத்திய கட்சி திமுக, முன்னாள் தமிழக முதல்வர் "சாஸ்திரி கருணாநிதி"என வட இந்தியர்கள் சொல்லலாம்
கலைஞர் டிவியின் சமஸ்கிருத வழங்கல் "சாஸ்திரி டிவி"
பிராமணரான பரிதிமாற் கலைஞருக்கு உண்மையான தமிழ் அக்கறை இருந்தது, தமிழ் வளர்க்கும் ஆசை இருந்தது தன் பெயரை சூரிய நாராயண சாஸ்திரி என்பதில் இருந்து அப்படியே தமிழ்படுத்தினார்
இதனை தமிழ்பற்றும் தமிழுக்காக வாழும் திமுகவினர் செய்தாக வேண்டும் அல்லவா? அவர்களுக்கான தமிழ்மொழி பெயரை நாமே வழங்குகின்றோம்
அறிவாலயம் - அறிவு திருக்கோவில்
கோபாலபுரம் - கண்ணபுரம்
அண்ணா துரை - மூத்த கிழார்
அண்ணா சமாதி - கிழார் புதைந்த இடம்
கருணா நிதி - இரங்கிய செல்வம்
அழகிரி - அழகிய மலை
உதய நிதி - எழுந்த செல்வம்
உதய சூரியன் - எழும் பரிதி
ரெட் ஜியண்ட் மூவிஸ் - சிவப்பு அரக்கனின் நாடக கொட்டகை
பஞ்சமி நிலம் - ஐந்தாம் பிரிவினர் நிலம்
சன் ஷைன் ஸ்கூல் - ஒளிரும் ஞாயிறு கல்வி கூடம்.
ராயல் பர்னிச்சர் - அரச தளவாட அங்காடி
பாரதி - ஆழ்ந்த அறிவுமிக்கோன்
துரை முருகன் - கிழார் முருகன்
சிவா - கைலாய நாதன்
கனிமொழி - பழுத்த மொழி
துர்கா - பத்ரகாளி
தயா நிதி - கொடை செல்வம்
பாலு - குழந்தை
ராசா - மன்னர்
மகேஷ் - ஆட்சி செலுத்துவோன்
நேரு - கால்வாய்
சன் டிவி - பரிதி தொலைகாட்சி
முதல் அமைச்சர் - ஒன்றாம் அறிவாளி
அமைச்சர் அவை - அறிவாளிகள் அவை
(நெஹ்ரு என்றால் கால்வாய் என்றுதான் பொருள், வளமான கால்வாய் குடும்பத்து வீடு என்பது நேரு வீடு என்றாகி அது ஜவஹர்லால் வரை குடும்பபெயராக தொடர்ந்தது..)
ஸ்டாலின் - (ரஷ்ய தூதரிடம் ஆலோசனை கேட்கபட்டுள்ளது..)