15ம் நூற்றாண்டில் இந்துஸ்தானத்தின் மொத்த ஆட்சியும் மொகலாயரிடம் சிக்கியது, அவர்கள் ஏகபட்ட சிற்றரசுகளை வைத்து இந்த கண்டத்தை பேரரசாக அமர்ந்து ஆண்டார்கள்
அவர்கள் அவுரங்க்சீப் காலத்தில் சிவாஜியோடு மோதி பலமிழந்து சரியும் பொழுது பற்பல சிற்றறசுகள் உதித்தன, ஒருவித குழப்ப நிலை நீடித்தது
அப்போது வந்த வெள்ளையன் அதை சிறிய சிறிய நாடுகளை பிடித்து பின் மொகலாயர் ஆண்ட அதே இந்துஸ்தானை பிரிட்டிஷ் இந்தியா என உருவாக்கினான்
இரு வகையாக இத்தேசத்தை ஆண்டுகொண்டிருந்தான் வெள்ளையன். ஒன்று ஆளுநர் நேரடியாக ஆளும் பகுதிகள் இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் பகுதிகள் இது மன்னர்களால் ஆளபட்ட சமஸ்தானம் என அழைக்கபட்டது
உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே இருந்தது
"மெட்ராஸ் பிரசிடென்ஸி"எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா, அதாது இவை 4ம் கலந்துதான் ராம்சாமி கேட்ட திராவிட நாடு
1857ல் பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், பிரிட்ட்டிஷ் இந்தியா எனும் வகையில் அவனும் சில உள்ளாட்சி தேர்தல்களை எல்லாம் நடத்திகொண்டிருந்தான், நிலங்களை அளத்தல், ரயில் நிலையம் கட்டுதல் என பல வளர்ச்சிகளும் அதில் இருந்தன
சுதந்திரம் நெருங்க முதல் பிரிவு மத அடிப்படையில் நடந்தது, இந்தியவில் அப்படி சில மாகாணங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல, இரு மாகாணம் பங்கிடபட்டன.
ஒன்று பஞ்சாப் இன்னொன்று வங்கம்
முதல் பிரிவுகள் இப்படி மத அடிப்படையில் நடந்தன
சுதந்திரம் அடைந்த அடுத்த 3 ஆண்டுகளிலே மொழிவாரியாக மாநிலங்களை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பபட்டது,
எழுப்பியர் ராம்சாமி அல்ல, அக்கோஷ்டி திராவிட நாடு வேண்டுமென்றதே தவிர மொழி அந்த பிரிவினைவாதிகளுக்கு பிரச்சினை அல்ல
அன்று ராம்சாமியே அண்ணா கும்பல் பிரிந்த கலக்கத்தில் இருந்தார், திமுக அன்று நாம்தமிழர் ஏதோ சொல்லிகொண்டிருந்தது, ஆனால் முணுமுணுத்துகொண்டிருந்தது, தமிழ்நாடு எனும் பெயரெல்லாம் கனவில் கூட இல்லை
பொட்ட ராமலு எனும் தெலுங்கர்தான் குளத்தில் முதலில் கல் எறிந்தவர், தனி ஆந்திரம் வேண்டுமென்று முதலில் அடம் பிடித்தவர் அவரே
பின் கமிஷன் அமைக்கபட்டு கன்னடம், கேரள, ஆந்திரம் என அமைக்கபட்டாலும், சென்னை மாகாணம் அதாவது "மெட்ராஸ் ஸ்டேட்"எனும் பழம்பெயர் தமிழகத்திற்கு தொடர்ந்தது
இப்போது இருக்கும் தமிழகம் இல்லை அது, திருத்தணியும் சென்னையும் ஆந்திரர்களிடமிருந்தது, மபொசி தலமையில் நடந்த போராட்டமே அதனை மீட்டெடுத்தது
கன்னியாகுமரி மாவட்டம் மார்ஷல் நேசமணி தலமையிலான போரட்டத்தில் தமிழகத்தோடு இணைந்தது. தேவிகுளம் பீர்மேடு எனும் தமிழக பகுதிகளை கேரளம் தர மறுத்தது, கன்னடத்திடம் சில பகுதிகளை இழந்தோம்
இது 63 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவங்கள்
பின் தியாகி சங்கரலிங்கம் என்பவர் சில கோரிக்கைகளுக்காக காந்தி வழியில் தேசியத்துகாக போராடியபொழுது அவருக்கே தெரியாமல் "தமிழ்நாடு"பெயரை எழுதி வைத்து அழிச்சாட்டியம் செய்தன திமுக கோஷ்டிகள்
அது சங்கரனார் கோரிக்கை அல்ல, அவரின் போராட்டத்தில் திமுக தானே எழுதி கொண்ட கடைசி வரி
ஆனால் அவர் இறந்தபின் திமுக அந்த பெயரை பிடித்து அழிச்சாட்டியம் செய்தது, பின் ஆட்சிக்கு வந்து அந்த பெயரையே சென்னை மாகாணத்துக்கு சூட்டியது
திராவிட நாடு என ஊரை ஏமாற்றிய கும்பல் மாநிலத்துக்கு அப்பெயரை சூட்டி அரசியல் செய்தது
இன்றும் இந்தியாவில் நாடு என அமைந்திருக்கும் மாநிலம் இது மட்டுமே, அன்றிலிருந்தே டெல்லிக்கும் நமக்கும் இடையே சந்தேக பார்வை உண்டு.
உண்மையில் திருப்பதி தொடங்கி திருவனந்தபுரம் வரைக்கும் தமிழக பூமி, கொஞ்சம் பெயர்களை கவனித்தாலே புரியும்
திருப்பதியும், திரு அனைந்த புரம் எனும் அந்த பகுதியும் தமிழர் நிலமே, சந்தேகமே இன்றி சொல்லமுடியும், இன்றும் திருவனந்தபுரம் வரை உள்ள மலையாளமும், அதற்கு வடக்கே இருக்கும் கொடு மலையாளமே அதற்கு சாட்சி
சரி 63 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கின்றது?
அன்று எங்களுக்கு சென்னையினை விட்டால் வேறு சொல்லிகொள்ள நகரமில்லை என கதறிய தெலுங்கர்கள் ஐதரபாத்தினை பிரமாண்டமாக உருவாக்கினார்கள், அது தெலுங்கானாவிடம் போன்போதும் இன்று அமராவதியினை கன ஜோராக உருவாக்கிகொண்டிருக்கின்றார்கள்
அன்று கன்னடத்தின் மிகசிறிய நகரமான பெங்களூர் இன்று உலகின் முண்ணணி நகரமாயிற்று
நாகர்கோவிலை விட பின் தங்கி இருந்த திருவனந்தபுரம் பெரும் நகரமாயிற்று, கொச்சின், திருச்சூர் எல்லாம் வளர்ந்திருக்கின்றன
தமிழகத்தின் நிலை என்ன? வெள்ளையன் விட்டுசென்ற அதே சென்னை, நிச்சயம் மிக வசதிபெற்ற நவீன நகரமாக சிங்கப்பூர் போல வளர்ந்திருக்கவேண்டிய நகரம் அதற்குரிய இடத்தினை பெறவில்லை, விமான நிலையம் கூட இடிந்துகொண்டே இருக்கின்றது
கன்னடமும், கேரளமும், ஐதராபாத்தும் கட்டங்களில் அசத்த நாமோ இன்னும் வெள்ளையன் கோட்டையிலே சட்டமன்றம் நடத்துகின்றோம்
அவர்கள் இந்தியும் படித்து தங்கள் மொழியினையும் காத்துகொள்ள, நாமோ இந்தியும் படிக்காமல் தமிழையும் காக்காமல் மொழிகொலை செய்துகொண்டிருக்கின்றோம்,
இன்றைய தமிழக தமிழனுக்கு ஒரு மொழியும் உருப்படியாக தெரியாது தமிழ் உட்பட
நீர் மேலாண்மையில் அவைகள் எல்லாம் தன்நிறைவு பெற்றிருக்க நாமோ அவன் தரவில்லை, இவன் தரவில்லை என அழுதுகொண்டிருக்கின்றோம், தண்ணீர் வந்தால் கடலுக்கு அனுப்புவோம்
ஒரு மணிநேர மழைக்கு தவிக்கும் சென்னையே சாட்சி
இந்த சீரழிவுக்கு இரு காரணங்களை உறுதியாக சொல்லமுடியும் ஒன்று சினிமா மோகமும் இன்னொன்று அதன் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட அரசியலும்
இந்த இரண்டாலும் தமிழகம் அடைந்திருக்கும் நாசம் கொஞ்சமல்ல, ஆந்திரா ராமராவோடு திருந்திற்று, ஆனால் பின்னாளில் தெலுங்கானா தனியாக பிரிந்தது, அது பிரிய ராமராவ் தொடங்கிய தெலுங்குதேசம் எனும் மாநில கட்சி பெரும் காரணம்
இன்று ஆந்திராவில் சினிமா நட்சத்திரம் அரசியலுக்கு வரமுடியாது, சிரஞ்சீவியின் வீழ்ச்சி அதனை சொல்கின்றது.
கேரளமும், கன்னடமும், தெலுங்கானாவும், சீமாந்திராவும் இன்று வரை தேசிய நீரோட்டத்தில் விலாகது பயணிப்பதும் அவர்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் மகா முக்கிய காரணம். இந்தியர்களாக உணர்கின்றனர், வாக்களிக்கின்றனர் அதே நேரம் தம் மாநில நலனை காத்தும் கொள்கின்றனர்
தமிழகத்தில் தாங்கள் தனிநாட்டில் இருப்பது போல் நாம் இருக்கின்றோம், இந்திய தேர்தல் என்றால் நாம் திமுகவினை அல்லது அதிமுகவினை ஆதரிப்போம், அவர்கள் காங்கிரசை அல்லது பிஜேபியினை ஆதரிப்பார்கள்
இதற்கு நேரடியாக மத்திய கட்சிகளை ஆதரித்தால் என்ன என நாம் யோசிக்கமாட்டோம், நாம் அப்படித்தான்
திராவிட அரசியல் அப்படி பல விமர்சனங்களுக்கு உட்பட்டது, இம்மாநிலம் அடைந்திருக்கும் பல கேடுகளுக்கு அவர்கள் காரணம் என்பதை மறுக்க முடியாது, மகா உண்மை
இன்னொன்று யதார்த்த நிலையில் இந்தியா முழுக்க ஒரு கட்சிஆட்சியும் தமிழகத்தில் தனி கட்சி ஆட்சியும் நடப்பது எப்படி தமிழகத்திற்கு நல்ல பலன் தரும்? ஒரு காலமும் தராது. இது யதார்த்த நடைமுறை
இந்தி படிக்கமாட்டோம், ஈழ புலிகள் ஆதரவு என பல விஷயங்களில் தமிழகம் தனிகொடி பிடித்தே தன்னை சீரழித்தது, சரி ஆள்பவர்களாவது ஒழுங்காக ஆண்டார்களா என்றால் ம்ஹூம்.
வெறும் நாடகத்தை வெற்று கோஷங்களை வைத்து ஆட்சியினை பிடிக்கும் இழிநிலை உலகில் தமிழகத்தை தவிர எங்குமே இல்லை
அட உலகில் எங்கும் சாத்தியமில்லை, பின் தங்கிய சோமாலியாவிலோ, ஆப்கனில் கூட சாத்தியமில்லா முட்டாள்தனம் தமிழகத்தில் மட்டும் சாத்தியமென்றால் திராவிட கட்சிகளே முதல் காரணம்.
மொத்தத்தில் இந்த மொழிவாரி பிரிவினையால் ஒரு மாநிலம் நாசமாக போய்கொண்டிருக்கிறது என்றால் அது தமிழகம் மட்டுமே, ஒரே காரணம் திராவிட கட்சிகள்
இந்த மொழிவாரி பிரிவுக்கு பின் ஒரே ஒரு இந்திய அடையாளம் தமிழகத்தில் நிறுவபட்டது என்றால் அது விவேகானந்தர் பாறை மண்டபம் மட்டுமே, எப்படி அது அமைக்கபட்டது என்றால் ஏக்நாத் ராணடே எனும் மனிதனின் ராஜதந்திரம் எல்லோர் வாயினையும் கட்டிபோட்டது
இல்லை என்றால் வங்கத்து காவி பரதேசிக்கு எங்கள் கடலில் மண்டபமா என கிளம்பியிருப்பார்கள்
ஆக மொழிவாரி மாநிலத்தால் நாம் இழந்தது மகா அதிகம், இன்னும் இழப்போம் இருந்து பாருங்கள்
இந்த திராவிட ஆட்சிகளால் மாநிலம் அடைந்த நன்மை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்
மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தால் நாட்டில் குழப்பமிருக்காது என மத்திய அரசு நினைத்துதான் பிரித்தது, இல்லையேல் இன அடிப்படையில் விபரீத பிரிவினை நடந்திருக்கும்
மற்ற மாநிலங்களில் அந்த கணிப்பு பலித்தது
ஆனால் தமிழகம் டெல்லியின் தீரா தலைவலியாக மாறிபோனது, அது இன்றுவரைக்கும் தொடர்கின்றது
ஆனால் இதில் தமிழகம் இழந்துகொண்டிருப்பதுதான் அதிகம் , இதனை மக்கள் சிந்திக்கும்பொழுது மாற்றம் நிகழலாம்
அதனை விட்டு தனிதமிழ்நாடு தீர்வு என கிளம்புவார்களாயின், கொஞ்சநாளில் தனி பாண்டிய நாடு, தனி கட்டபொம்மன் பாளையம் என குரல்கள் கேட்கும் காலம் வரும்
மானிட மனம் அப்படிபட்டதுதான், அதாவது பிரிய நினைத்தால் பிரிந்து கொண்டே இருக்கலாம், சேர்ந்து வாழ நினைத்தால் வாழ்ந்துகொண்டே இருக்கலாம்
ஒற்றுமைதான் பலம்
உலகில் ஓரளவு இந்தியாவிற்கு மரியாதை இருக்கிறதென்றால் அதன் பெரும் மக்கள் தொகையும், அது கொடுக்கும் பலமுமே
மொழிவாரியாக பிரிந்தாலும், இந்தியன் எனும் உணர்வில் ஒன்றாய் இருப்பதே உயர்வுக்கு வழி, அமைதிக்கும் வழி.
மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்,
ஆனால் நிச்சயமாக தமிழருக்கு ஒரு நலனும் இல்லை, தொல்லைகள் தான் கூடிகொண்டே இருக்கின்றன,
ஆனால் அவை நிச்சயமாக மாநில அரசியலால் அதிகரித்த தொல்லைகள் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது.
சென்னை மாகாணம் முழுக்க சேர்த்து திராவிட நாடு அமைப்போம் என பெரும் புரட்டை சொன்னார் ராம்சாமி அவரின் தளபதிதான் அண்ணாதுரை
அவரின் அல்லக்கை கருணாநிதி
இவர்கள்தான் மொத்த தென்னகத்தையும் தனிநாடு ஆக்குவோம் என முழங்கினார்கள், ஆனால் அதை மலையாளி, ஆந்திரா, கன்னடா என ஒரு பயலும் காதுகொடுத்து கேட்கவில்லை
இதனால் இன்றும் இந்தி படிக்கின்றார்கள் அதே நேரம் மாநில மொழியினையும் காக்கின்றனர், இங்கோ மாநில மொழியும் அழியவிட்டு மாநிலமும் அழிந்து கொண்டிருக்கின்றது
இந்த திருட்டு திராவிடம் இங்கிருந்து விடைபெற்றால் தவிர தமிழகம் உருப்பட வாய்ப்பே இல்லை, நிச்சயம் இது மிகபெரும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டிய மாநிலம்
ஆனால் திராவிட கும்பலால் உருப்படாமல் போயிற்று
அன்றைய சென்னை மாகாணத்தின் மற்ற மாநிலங்கள் இன்று வளர்ந்து நிற்பதையும் அன்றே வளர்ந்திருந்த தமிழ்நாடு ஒரு மழைக்கும் தாங்காமல் நாசமானதை நினைத்து பாருங்கள் உண்மை விளங்கும்
இன்னும் விவசாயம், தொழில்வாய்ப்பு, உள் கட்டமைப்பு என அவற்றின் வளர்ச்சியினையும் தமிழக நிலையினையும் ஒப்பிட்டு பாருங்கள், திராவிட கும்பலின் பொய்முகம் நன்கு விளங்கும்
அவர்கள் தேசியம் பேசி அழியவுமில்லை நாம் திராவிடம் தமிழ்நாடு என பிரிவினை பேசி முன்னேறிவிடவுமில்லை
இன்னும் ஆழமாக பாருங்கள் திருப்பதி முதல் தெலுங்கு ஆலயங்கள், சபரிமலை முதல் கேரள ஆலயங்கள், சாமுண்டீஸ்வரி ஆலயம் முதல் கன்னட ஆலயங்களை பாருங்கள்
அவற்றின் பராமரிப்பும் அவர்கள் கண்போல் காப்பதும் உங்களுக்கு தெரியும்
அங்கு சிலை திருட்டு, ஆலய நகை கொள்ளை , உண்டியல் ஊழல் என எதுவுமில்லை. சுத்தமும் இதர பராமரிப்பும் மிகுந்த ஆலயங்கள் அவை
தமிழகத்தில் இந்து ஆலயம் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியம் அல்ல, அதுதான் திராவிடத்தின் உச்சகட்ட சாதனை