Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

ஜெயமோகனின் ஜொலிக்கும் கட்டுரை

$
0
0

ஜெயமோகனின் ஜொலிக்கும் கட்டுரை

31/03/2019

நான், இந்த மகத்தான இளம் அரைகுறையான சமஸ் ஸமோஸா ஸமஸ்தானத்தின் ‘கிரா அதிரடி பகீர்ப் பேட்டி‘யைப் படித்திருக்கவில்லை.
ஆனால் ஜெயமோகனுக்கு நன்றியுடன் அந்த அலங்கோலத்தைப் படிக்க நேர்ந்தது.
நீங்களுமா கிரா? உங்களுக்கு இந்த வயதில் அற்பர்களின், திராவிட தீவட்டிக் கொள்ளைக்காரர்களின், அவர்களுக்கு வால்பிடிக்கும் ஊடகப்பெருச்சாளிகளின் தயவு தேவையா?
அதுவும் அடிப்படை அறிவற்ற, பரந்த படிப்பறிவற்ற –  அனுபவமுமற்ற ஒரு பயிற்சியாள ஊடகப்பேடியின் குசும்புக் கேள்விகளுக்கெல்லாம்  உங்களைப் போன்ற ஆகிருதி மிக்கவர் பதில்தரத்தான் வேண்டுமா? ‘வாய மூட்றா’ எனச் சொல்லியிருக்கவேண்டாம், நீங்கள் அதிர்வடைந்து கோபத்தில் பேசியதாக எனக்கு நினைவில்லை – ஆனால் கேட்கும் குயுக்தித் திரித்தல் கேள்விகளுக்கெல்லாம், பதில் சொல்லத்தான் வேண்டுமா? அடுத்தடுத்த கேள்விகளுக்குப் போனால் என்ன? வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கிரா! :-(
சோகம்.
ஆக – தமிழ் இலக்கியத்தின் (+ இக்கால அலக்கியம் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்) பலமாமாங்க வாசகனாகவே இருக்கும், அப்படியே தொடர விரும்பும் (பயப்படாதீர்கள் நான் என்றுமே தமிழ்ப் படைப்பாளனாகப் போவதில்லை, சரியா?) எனக்கு – ஜெயமோகனின், ஸமஸ்-கிரா பேட்டி குறித்த கட்டுரையானது, நம் தமிழ்ப் பாரம்பரியம் குறித்து கர்வமும் ஆசுவாசமும் தருவது. அழகானது. ஆதூரம் தருவது.
மேலும் –  ஒரு உடனடி எதிர்வினை எனும் புள்ளிக்கு அப்பாற்பட்டு – அக்காலத் தொண்டன் சதங்கை கசடதபற எழுத்து படிகள் சரஸ்வதி +++++ எனப் பலகாலமாகப் படித்துவரும் எனக்கு, இலக்கிய வளர்ச்சி, சர்ச்சைகள் பற்றி ஓரளவு அறிவும் வாசிப்பும் உள்ள எனக்கு – ஜெயமோகனின் இந்த எதிர்வினைக் கட்டுரையானது, தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றுரீதியாக, ஒரு மிகமிக முக்கியமான கட்டுரை எனப் படுகிறது.
ஏனெனில் இப்போதும் அதிக பட்சம் ஒரு ஐந்தாயிரம் பேர்தான், தேர்ந்த வாசகர்களாக நம் தமிழகத்தில் (என் அனுமானத்தில்) இருக்கலாம் என்றாலும் – இவர்கள்தான் தரத்தை நிர்ணயம் செய்பவர்கள், முன்னோடித் துய்ப்பாளர்கள். என்னைப் பொறுத்தவரை இவர்களுடைய கருத்துகளில்/எண்ணப் போக்குகளில்தான் சாரமிருக்கச் சாத்தியக்கூறு இருக்கிறது. ஆக, இவர்களின் பார்வையாகவும் ஜெயமோகனின் கட்டுரை இருக்கிறது.
-0-0-0-0-
தஹிந்து ஆங்கில தினசரி – ஒரு பேடித்தனமான, விஷயங்களை ஜோடனை செய்யும் வுடான்ஸ் பத்திரிகை என்பதில், சுயசிந்தனையும் ஓரளவு படிப்பறிவும் உள்ள யாருக்குமே ஐயமிருக்க முடியாது.
அதைவிடப் படுமோசமாக ஒரு தினசொறி இருக்கமுடியுமானால் அது இந்த நஷ்டத்தில்* நொண்டிக் கொண்டிருக்கும் மஞ்சள் பத்திரிகை எழவான ஆங்கிலமூலத்தின் ஏழைமச்சானான தமிழ்ஹிந்துவாகத்தான் இருக்கும். அதுவும் அதன் பேடி நிருபர்களும், எழுத்தாளர்களும் – பார்க்க, படிக்கச் சகிக்கவில்லை எனக்கு. (அண்மையில் அந்த அறிவிலி-லும்பன் கும்பல், ஒரு குப்பை வரலாற்றுக் காட்டுரையைப் பதிப்பித்தார்கள் – அதற்கு, மண்டையில் அடித்துக்கொண்டு ஒரு எதிர்வினையும் கொடுத்தேன்! தண்டக் கருமாந்திர உதவாக்கரைகள்!)
(*ஆனால், பொய்ப் பரப்புரைகள் செய்ய தமிழ்ஹிந்து தயங்குவதாகத் தெரியாததால் – அதற்கு தீரா விட முயக்கங்களிலிருந்து வேண்டுமளவு கருணா பூர்வமான நிதி கிடைக்கலாம். ஏற்கனவே தஹிந்துவில் தொழிற்சங்கம் திமுக குண்டர்களால் நிரப்பப்பட்டது. மேலும் சிலபல நிர்வாக அளவு ஊடுபாவுகளும்  திராவிட முதலீடுகளும் இருக்கின்றன. ஆக – ஏகத்துக்கும் ராஹுல்காந்திக்குச் சப்பைக்கட்டு கட்டுவது (என் ராம் –  தாம் ‘திருத்திய’ ரஃபேல் தஸ்தாவேஜுகளைச் சரியானவை என மனதாறப் பொய்சொல்லிப் பதிப்பித்தார்) முதல், மாப்பிள்ளை முறை தயாநிதி மாறன்களின் ஊழல்களை அமுக்கி வாசிப்பதுமுதல் பலப்பல கமுக்கமான விஷயங்கள்.)
சரி.
பாரதத்தின் கட்டுக்கோப்பினை, அதன் சகிப்புணர்ச்சியை, அதன் பன்முகங்களை ஆஸிட்பல்ப் விட்டெறிந்து சிதைக்க முயன்று கொண்டிருக்கும் தமிழகப் பேடிகளில், அதுவும் ஊடகப்பேடிகளில் முதன்மைத் தகுதி பெற்றது இந்த மஞ்சள்பத்திரிகை கும்பல்.
வெறும் ‘ஹிட் ஜாப்’ களைக் கூடச் சரியாகச் செய்யத் தெரியாத கோமாளிகள். தொழில்தர்மமற்ற பேடிகள்.
ஆனால் இதன் பிம்பம் என்னவோ, ‘அறம் வாய்ந்த பத்திரிகை!’  போங்கடா!
இந்த அதிசராசரி பொறுக்கிப்பண்பாட்டுச் சூழலில் தான் ஜெயமோகன் அவர்களின் ‘எதிர்க் கட்டுரை’ மிக முக்கியமானதொன்று.
-0-0-0-0-
இதுவரை நீங்கள் அக்கட்டுரை பக்கம் போகவில்லையானால் அவசியம் படிக்கவும்: கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு
ஜெயமோகன் அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்தும்.
(இப்படியே ஆழமும் செழுமையும்  வரலாற்றுக்குறிப்புகளும் மிக்க, சான்றுகள் மீதான கட்டுரைகளை அவர் இன்னமும் நிறைய எழுதினால் நன்றாக இருக்குமே எனும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை, but each unto his own, oh what to do!)

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>