Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

A HERO FOR MODERN INDIA

$
0
0

தன்னார்வ ஃப்ரான்ஸ்வா கொத்தியே அவர்களின் நரேந்த்ரமோதி பிரச்சாரப் படம்

01/04/2019

இது சுமார் 10 நிமிடங்களே ஒடுவது; அவசியம் பார்க்கவும்.

ஹிந்தி விவரணை – ஆனால் நிறுத்தி நிதானமாகச் சொல்லப் படுவதினால் பெரும்பாலும் நம்மைப்போன்ற பாரத அபிமானித் தமிழர்களாலும் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் – பல வார்த்தைகள் தமிழிலும் இருக்கும் ஸம்ஸ்க்ருத மூலங்கள் தாம். மேலும் ஆங்கிலத்தில் ஸப்டைட்டில்ஸ். ஒரு பிரச்சினையுமில்லை.

ராஜஸ்தானத்தின் மஹாராணா ப்ரதாப்ஸிங், சத்ரபதி ஷிவாஜி மஹராஜ் போன்றவர்களின் சில வாழ்க்கைக் குறிப்புகளையும், பாரதத்துக்கு இப்போது அதிசயிக்கத்தக்க அளவில் வாய்த்துள்ள தலைவர் நரேந்த்ரமோதி அவர்களின் சில குறிப்புகளையும் பொருத்திப்பார்த்து ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது இப்படம்.







…என் (தரவுகளின் மீதான) மனச்சாய்வுகளை ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறேன். இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன்: நரேந்த்ர தாமோதர் மோதி போன்ற செயலூக்கமும் பாரதாபிமானமும் மக்கள்மீது கரிசனமும் ஊழல்களுக்கெதிரான மனப்பான்மையும் கொண்ட ஒருவரை, ஊழலற்ற மத்திய ஆட்சியைக் கொடுக்க சர்வ நிச்சயமாக முடியும் எனக் காண்பித்த பாரதீய ஜனதா கட்சியை – 2019ல் மீண்டும் அமோகமாகத் தேர்ந்தெடுக்க நமக்கெல்லாம் கிடைத்துள்ள வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

பலவிதமான பொய்ப் பரப்புரைகளினாலும், தீவட்டித் திருடர்கள் தாங்கள் திரும்ப ஆட்சிக்கு வந்தால்தான் இன்னமும் ‘தின்ன’ முடியும் சிறைக்குச் செல்லாமல் ஏமாற்றமுடியும் என்பதாலும் – முக்கியமாக நம் பேடி அறிவுஜீவிகள்​+ஊடகங்களினாலும் எதிர்மறை எண்ண அலைகள் முட்டுக்கொடுக்கப் படுகின்றன. ஆனால் – அவற்றின் குறிக்கோட்களையும் கயமைப் பொய்மைகளையும் அறிந்துள்ள நம் சாதாரண மக்கள், தரித்ர நாராயணர்கள், சரியான முடிவுகளுக்கு பாரதத்தை உந்துவார்கள் எனத்தான் நினைக்கிறேன்.

…மீண்டும் இரண்டுமூன்று முறை பாஜக-வுக்கு வாய்ப்பு கிடைத்தால், தொடர்ந்து, கடும் உழைப்பினாலும் நல்லெண்ணங்களினாலும் திட்டச்செயலாக்கங்களினாலும், காங்கிரஸ்கூட்டணிப் பேடிகளின் உபயத்தில் ஒட்டல் உடைசலாக இருந்த பாரதத்தைத் தொடர்ந்து பட்டிபார்த்து டிங்கரிங் பாலிஷ் செய்து வண்டியையும் மேன்மைப்படுத்தி ஜொலிக்கச் செய்வார்கள் என நான் மனதாற நம்புகிறேன். பார்க்கலாம்.

அவசியம், நம் கண்டிப்பாக அளித்தேயாகவேண்டிய பங்களிப்பை மறக்காமல், வாக்களிப்போம். ஏன் நம்மால் இதனைக் கூடச் செய்யமுடியாதா என்ன?



(போஸ்டர் வடிவமைப்பு: ரித்விக் ஜெயஸிம்ஹா)

ஜெய்ஹிந்த்


Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>