சிவகங்கை தொகுதி மக்களுக்கு:
தமிழகத்திலிருந்து 4முறை நிதி அமைச்சரைக் கொடுத்த தொகுதியும் , 1 முறை உள்துறை அமைச்சரையும் கொடுத்த தொகுதியான சிவகங்கை தொகுதி ஒரு VVIP தொகுதி. ஆனால் 7 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியைத் தந்த சிவகங்கை மக்களுக்கு ப சிதம்பரம் கொடுத்த பரிசு? வறுமை வறுமை வறுமை.
அமைச்சராக இருந்த காலத்தில் தொழிற்சாலைகளை இங்கே கொண்டுவரவோ - தண்ணீர் பிரச்சனையைத் தீர்வு காணோ இன்னும் ஆக அவசியமான மக்கள் தேவைகளைத் தீர்த்துவைக்க முயலாத சிதம்பரம் அவர்கள் இந்த தொகுதியிலிருந்து 7 முறை தேர்வு செய்யப்பட்டவர். இது எவ்வளவு பெரிய அவமானகரமான விசயம்? தமிழகத்திலேயே மிகமிக பின் தங்கிய நிலையில் சிவகங்கை தொகுதி.. இன்று மீண்டும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரம் இன்னொரு 25 வருடம் ஏமாற்ற வந்துள்ளார் வோட்டு கேட்டு.
சிவகங்கை தொகுதியின் கீழ் வரும் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி மக்கள் எவரும் இனி இந்த சிதம்பரம் குடும்பத்திற்கே வாக்கு செலுத்துவது இல்லை என்று முடிவெடுத்துவிடுங்கள். ஏன் என்றால்
1.சிதம்பரம் அவர்களின் மீது நடைபெறும் 3500 கோடிக்கு மேலான வர்த்தக முறைகேடு ஏர்செல் மேர்சிஸ் வழக்கு மட்டும் அவர் வாய்தா வாங்கவே டெல்லியில் முழு நேரம் குடி இருக்க வேண்டும். இதில் சிறை செல்ல அதிக வாய்ப்புகள் உண்டு என்பதைத் தாண்டி இது சராசரி அறிவுள்ளோர்க்கே தெரியும் பெரிய முறைகேடு திட்டமிட்டுச் செய்துள்ளார்கள் என்று.
2.அவர் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது வெளி நாடுகளிலிருந்து Sequoia Capital India போன்ற நிதி நிறுவனங்கள் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக பணப்பரிவர்த்தனை செய்தது , முறைகேடாக நாட்டிற்குள் பணத்தினை கொண்டுவருதல் , INX மீடியா என்று ஒரு டஜன் வழக்குகள் இருக்கிறது அதன் தீர்ப்புக்கும் - வழக்குக்கும் இவரும் டெல்லியில் இருப்பது வசதி. இந்த கடந்த 5 ஆண்டுகள் இவர் வாரம் தவறாமல் நீதி மன்றம் சென்று வருகிறார்.
3.சிதம்பரம் அவர்களின் மனைவி இவர் மீது இந்தியாவிலேயே நடந்த மிகப் பெரிய சாரதா சீட்பண்ட் நிதி நிறுவன மோசடி சுமார் 20,000கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியதற்கான வழக்கில் லஞ்சம் சுமார் 1.5கோடி பெற்றதாக வழக்கு அத்துடன் வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என்ற வழக்கும் நடைபெறுகிறது.
4.சிதம்பரம் அவர்களின் மருமகள் - கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி அவர்கள் மீதும் முறைகேடாக வெளி நாடுகளில் சொத்துக்கள் குவித்ததற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடைபெறுகிறது.
ஆக இந்த மொத்த குடும்பமும் இன்றைய தேதியில் டெல்லியிலிருந்து நீதி மன்றம் தினமும் சென்று எதாவது ஒரு வழக்குக்கு ஆஜர் ஆவதே வேலையாக மாறிவிட்ட நிலையில் இந்த குடும்பம் எப்படி சிவகங்கை தொகுதி மக்கள் நலனுக்கு வேலை செய்யும்??? சற்று சிந்தியுங்கள்
அதாவது 7 முறை தேர்வு செய்து அனுப்பிய போது நிதி அமைச்சராக , உள்துறை அமைச்சராக என்று உயர் பதவிகளிலிருந்த போது எதுவும் செய்யாது ஒரு நபர் இன்று தன் மகனுக்கு வாக்கு கேட்டு வருகிறார் 35 வருடங்களாகச் சொன்ன அதே பல்லவி "அதே வறுமையை ஒழிப்பேன் , கடன் தள்ளுபடி செய்வேன்"என்று வசனம் பேசி -இந்த முறையும் ஏமாறப் போகிறீர் என்றால் உங்களை விட வெகுளி வேறு ஒருவர் இந்த நாட்டிலேயே கிடையாது.
என்னைக் கேட்டால்
சிவகங்கைக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கே ப சிதம்பரம் தேவை இல்லை.
-மாரிதாஸ்