திராவிட கழகத்தைப் பகுத்தறிவு கூட்டமாக நினைத்த பலருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே :
நீங்கள் ஈ வே ராமசாமி அவர்கள் 1932 ஜூன் 20ஆம் தேதி பிரிட்டனில் 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முன் உரையாற்றினார் என்ற வரலாற்றைக் காலம் காலமாகத் திராவிட கழகம் கூறிவந்ததை அறிவீர் என்று நம்புகிறேன் - அது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இங்கே இவர்கள் சொன்ன பொய். நமது சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் மொத்தமும் முழுவதும் நிரப்பினால் 50,000பேர் வரை இருக்க முடியும். 1932ல் பிரிட்டன் 1932 மக்கள் தொகை , அதில் குறிப்பிட்ட இடத்தின் மக்கள் தொகை அதில் தொழிலாளிகள் மக்கள் தொகை அதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் இல்லை சங்கத்தின் தொழிலாளர் எண்ணிக்கை என்று நீங்கள் எப்படித் தேடினாலும் இந்த 50,000பேர் என்ற எண்ணிக்கையே மிகக் கேவலமான பொய் என்று தெரியவரும்.
அதுவும் இங்கிலாந்து மக்கள் தொகை குறிபிட்ட நகரத்தில் என்று தேடினால் இவர்கள் சொல்லும் கதை எவ்வளவு அருவருப்பானது எனபது புரியும்.
இதே போல் ஈ வே ராமசாமியை வைத்து இவர்கள் அளந்த கதைகள் ஆயிரம் ஆயிரம். அதில் மிக அருவருப்பானது வைக்கம் வீரர் பெரியார் , UNESCO. இதற்கு ஆதாரம் எடுத்து முன்வைத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்???? போய் திராவிட கழகத்தின் சட்டையையும் , திமுக சட்டையையும் பிடிக்க வேண்டும் "ஏமாற்றிப் பிழைப்பதற்கு வெக்கமாக இல்லையா என்று அவர்கள் இருவரையும் கேள்வி எழுப்பவேண்டும்"அது தானே பகுத்தறிவு உள்ளவர் செய்யவேண்டும்??? சரிதானே??? ஆனால் ஆதாரத்துடன் நிரூபிக்கும் நபர்களைத் திட்டுவது என்ன பகுத்தறிவு????
திராவிட கழக பகுத்தறிவுவாதிகள் ஜனநாயக போராளிகள் இன்று ஒரு உண்மையை எதிர்கொள்ள முடியாமல் அதைச் சொன்னவர்களை வசைபாடுவது வெக்க கேடு. வீரமணி ஒன்றும் ராஜராஜ சோழன் அல்ல உழைக்காமல் அடுத்தவர் பணத்தில் ஓசி சோறு சாப்பிடும் ஒரு ஜந்து அவ்வளவு தான் எனக்குத் தெரிந்து. அவர் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள் என்று பலவிதமாக எந்த அளவிற்குக் கொள்ளை நடக்கிறது நிர்வாக திருட்டுத்தனம் நடக்கிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஈவே ராமசாமி விட்டுச் சென்ற சொத்தை அனுபவிக்க அவருடன் ஒரு பத்து அருவருப்பான பிறவிகள் சுற்றித் திரிகின்றன. அந்த எச்சைப் பிழைப்பு பிழைக்கும் ஜாதி தோசை சுடும் நபர்கள் வேண்டுமானால் கீ வீரமணி தலைவராக இருக்காலாம் ஆனால் இந்த மாநிலத்திற்கும் தேவை இல்லை.
எனவே என்னைத் திட்டுவதை விட்டு விட்டு உங்களுக்குத் திராணி இருந்தால் அங்கே சென்று சண்டை போடவும்.
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
அடுத்து திருமுருகன் எதோ யோக்கியவான் போல நினைத்து உணர்ச்சிவசத்தால் உந்தப்பட்டுத் திரியும் சில நல்ல உள்ளம் கொண்ட இளைஞர்களும் அவதூறாகப் பேசுவதைக் காண முடிகிறது.
இதோ பாருங்கள் புரிகிறது உங்கள் வருத்தம் கோபம். நீங்கள் நம்பிக்கை வைத்த ஒரு போராளியை ஒரு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நபரை மாரிதாஸ் என்ற நபர் கீழ்மை படுத்தலாமா என்ற அந்த கோபம் புரிகிறது. ஆனால் நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு உரிய நபர் அந்த திருமுருகன் கிடையாது.. ஏன் என்று நானே ஒரு பதிவை இந்த மாத இறுதிக்குள்ளாக விரிவாக வெளியிடுகிறேன். அதனை எடுத்துக் கொண்டு பொறுமையாக நான் சொல்லும் தகவல்கள் சரியா என்று தேடி அறிந்து பின் நீங்களே உங்கள் நம்பிக்கை சரியா என்று சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
நக்கீரன் , விகடன் பத்திரிகைகள் நினைத்தால் என்றவேண்டுமானாலும் எவனை வேண்டுமானாலும் போராளியாக மாற்றுவோம் புரட்சியாளராக மாற்றுவோம் என்ற நிலையில் தமிழகம் இருந்தால் அது நிச்சயம் நாசம் செய்யும் தவிர நல்லது செய்யாது.
நான் கடந்த 18ஆண்டுகள் மேலாகத் தீவிரமாக அரசியலையும் , அரசியல் நகர்வுகளையும் பார்க்கிறவன், போராட்டங்களில் பங்கேற்றவன் என்ற விதத்தில் சொல்கிறேன் "சீமான் கூட ஒரு ஒருபக்கம் ஏற்றுக் கொள்வேன் அவர் பல ஆண்டுகள் நானே கண்டதுண்டு பொது விவகாரங்களில் சரியோ தப்போ நிற்பதை. ஆனால் இந்த திருமுருகன் காந்தி என்பவன் தந்திரமாக திமுக திக கூட்டத்தின் திட்டப்படி லாட்டரி மார்டீன் என்பவரால் உதவி செய்யப்பட்டு , லயோலா கல்லூரிகள் போன்ற கல்லூரிகள் மூலம் அவருக்கு மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையும் செய்யப்பட்டு மிக மிக தந்திரமாக போராளியாக உண்மைக்கு மாறாகத் தூக்கி வைக்கப்பட்டவன்.
அவன் நோக்கம் முழுக்க முழுக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும் அதற்கு எதிராக எவர் வந்தாலும் அவர்கள் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நரி வேலை தான் செய்வது ஒழிய வேறு இல்லை. அதற்கு மக்களிடம் ஒருவித விரத்தியான மனநிலையைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பான். எங்கே எல்லாம் பிரச்சனை தலைதூக்குகிறதோ அதை அப்படியே அரசியல் லாபமாக திமுகவிற்கு மாற்றுவது இவன் செய்யும் வேலை. இவன் மட்டும் இது போல 20க்கும் மேற்பட்ட இயக்கம் இருக்கிறது இங்கே எல்லாமே திக திமுக வழிகாட்டுதலின் பெயரில். இவன் இல்லை என்றால் வேறு ஒருவனைக் கொண்டு வந்திருக்கும் திக.
எனவே நான் ஆதாரத்துடன் வீடியோ பதிவு வெளியிடும் வரை கொஞ்சம் காத்திருங்கள். பின் அதற்குத் திருமுருகன் உரியப் பதிலைச் சொல்லவில்லை என்றால் அது தவறு என்றால் நானே மன்னிப்பு கேட்கிறேன். அது உண்மை என்றால்????? நான் உங்களை கேட்டுகொள்வது ஒன்று தான் “நீங்கள் இப்படி போலிகளை நம்பாமல் உங்கள் வீட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற என்ன வழி என்று உருப்படியான வேலையை பார்க்கச் செல்லவும்”.
வைகோ என்ற மனிதரை இங்கே பேசாதவர் எவரும் இல்லை ஆனால் நான் என்றாவது அவரை பற்றிப் பேசியது உண்டோ??? அதே போல ஸ்டாலின் ஆரம்பித்து திருமாவளவன் வரை தனிப்பட்ட விதத்தில் மரியாதையைக் குறைவாக பேசியது உண்டா???? பின் ஏன் திருமுருகனைத் தீவிரமாகக் கடுமையாக எதிர்கிறேன். அந்த அளவிற்கு அவன் தரங்கெட்ட தந்திரம். அவன் தகுதி அவ்வளவு தான் என்பதால் தவிர வேறு இல்லை.
திருமுருகன்- திக - திமுக- மார்டீன் - லயோலா - நக்கீரன் இணைந்து மிகப் பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் உலகம் முழுமையாக உணரும்.
இறுதியாக மாணவர்களுக்குச் சொல்ல விரும்புவது :
போராட்டம், போராளி, புரட்சி என்ற வார்த்தைகள் இங்கே போதையை ஏற்றும் வார்த்தைகளாக மாறிவிட்டது. அந்த வகையில் புகைபிடிப்பது , மது அருந்துவது , கஞ்சா ஏற்றுவது போல தான் இந்த புரட்சி போராளி என்ற வாக்கியமும். தற்காலத்தில் இதுவும் உங்கள் வாழ்வை உங்கள் குடும்பத்தை நாசம் செய்யும் நீங்கள் சரியான காலத்தில் விழித்துக்கொள்ளவில்லை என்றால்.
போராட்டம் புரட்சி என்று திரிந்து காலம் வீணடித்து குடும்பத்தையும் கெடுத்து நின்ற பல நல்ல நபர்களை நான் அறிவேன். அவர்கள் என்று எங்கோ ஒரு லாஜில் உறவு எதுவும் இன்றி வேலையும் சரியாக இல்லாமல் காலம் கடத்துவது. 10வருடம் மேலாக நீதிமன்றம் போலீஸ் நிலையம் வீட்டுக்கும் அலைந்து வாழ்க்கை தொலைத்துவிட்டு நிற்பவர்கள் பலரையும் நான் அறிவேன். ஆனால் இந்த திருமுருகன் போன்றவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். ஆனால் அகப்பட்டவன் அப்பாவியாகத் தான் இருப்பான். அந்த நோக்கத்தில் கூறுகிறேன் தவிர வேறு எதுவும் எதிர்பார்த்து அல்ல.
-மாரிதாஸ்