கமல்,
"நான் ஒரு ஆண்மையற்ற அரசியல்வாதி "என்று மைக் போட்டு ஊருக்கு சொல்லிக்கொண்டிருந்த பேச்சை கேட்க நேர்ந்தது. கோட்ஸே எனும் தூண்டில் போட்டு முஸ்லீம் ஓட்டுக்களை யாசித்து கேவலம். 60 நொடிகளில் திராவிட அரசியல் வாதியை விட ஆபத்தானவர் நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்.
"நான் முஸ்லீம்கள் நிறைய பேர் இருக்கிற இடத்தில பேசுறேங்குறதுக்காக இதை சொல்லல"என்று சொல்லும் போது நீங்கள் கட்டியிருந்த கோவணம் கழண்டு விழுந்தது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். மிகவும் அசிங்கமாய் தெரிந்தீர்கள்.
"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து"என்று முஸ்லிம் பகுதியில் பேசுவதுதான் நீங்கள் செய்யவிருக்கும் மாற்றமா? - என் எழுத்தின் மீது நான் வைத்திருக்கும் மரியாதை காரணமாக உங்களை விமரிசித்து அசிங்கமாக எழுத முடியவில்லை. பொறுப்பற்ற பேச்சு என்றோ பொறுக்கித்தனம் என்றோ சொன்னால் மிகவும் மென்மையாக தெரிகிறது. ஆண்மையற்ற செயல் நீங்கள் செய்தது.
"அங்கு தொடங்குகிறது அது" - என்று எதை சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. அரசியல் கொலைகளுக்கும் தீவிரவாதக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளாய் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்களா?
John F. Kennedyயை கொலை செய்த Lee Harvey Oswald செய்தது அரசியல் கொலை. அதை யாரும் தீவிரவாதம் என்று சொல்வதில்லை.
இந்திரா காந்தியை கொன்று முடித்ததும் அரசியல் கொலை. "சுதந்திர இந்தியாவின் முதல் சீக்கிய தீவிரவாதிகள் Beant Singh and Satwant Singh"என்று பேச முடியுமா உங்களால்? இல்லை அப்படி பேசுவதுதான் சரியாகுமா?
காந்தியின் "மானசீக கொள்ளுப் பேரனே", ராமலிங்கத்தின் "மானசீக சகோதரனாக", 1500 பாலேஸ்வர முதியவர்களின் "மானசீக புத்திரனாக", துரத்தியடிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளின் "மானசீக ஏதோ ஒன்றாக"ஆக முடியாமல் தடுப்பது எது? திராவிட நடுநிலையா? வெட்கமே இல்லையா உங்களுக்கு?
இப்படி இந்துக்களின் முதுகில் குத்திவிட்டு மார்தட்டி "நான் நல்ல இந்தியன்"என்று சொல்வது ஆண்மையற்ற செயல். திராவிட அரசியலில் இருக்கும் அதே ஆண்மையற்ற கோழைத்தனம் உங்களிடம் இருப்பது வியப்பொன்றுமில்லை. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு.
ஹே ராம்!
-ச. சண்முகநாதன்