Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

இதற்கும் கூட மனித உரிமைகள் பேசுவார்கள்

$
0
0

தலை நகர் டெல்லியில் வழக்கமாக நடக்கும் கொலைகள், கற்பழிப்புகள் தவிர இது போன்ற நிகழ்வுகளும் அங்கு நடந்துகொண்டுதான் உள்ளது. நேற்று இரவு பத்து மணி அளவில் தெற்கு டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ஆல்வி சவுக் என்ற இடத்தில் நடந்த கொடூரம் இது. வீட்டில் இருக்கும் அம்மாவும் பெண்ணும் இரவு சாப்பிட தாயார் ஆகின்றனர். அப்போது ஜாவீத் என்ற இளைஞன் குடிபோதையில் அங்கு வந்து அவர்கள் வீட்டு  மாடிப்படி அருகில் சிறுநீர் கழிப்பதை கண்டு அவனை கண்டிகின்றனர். கோபம் அடைந்த அவன் அவர்களை திட்டிக்கொண்டே சென்று விட்டு சில நிமிடங்கள் கழித்து திருப்பி வந்து அவர்களை வெளியில் கூப்பிட்டு இருவரையும் தான் கொண்டுவந்த 7.65 mm துப்பாகியால் சுட்டுள்ளான். பினோ என்ற அந்த பதினேழு வயது இளம் பெண்ணையும் அவளின் அம்மாவையும் அருகில் குடி இருந்தவர்கள் சேர்ந்து அகில இந்திய மருத்துவ கழகத்தில் சேர்க்க அந்த பெண் முன்னரே இறந்து விட்டதாக அறிவித்துவிட்டனர், தாயை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

ஜாவீத் அந்த இளைஞனும் அவன் தாயும் பினோ வின் வீட்டில் முன்பு குடி இருந்துள்ளனர். அவன் ஒரு முன்னாள் குற்றவாளி, ஒரு கொலை கேசிலும் இடம் பெற்றுள்ளான் என்று போலீஸ் தகவல். அவனின் தாய் வீட்டு  வேலைகள் செய்து வருபவர்.பல நேரங்களில் பினோ வின் குடும்பம் அவர்களுக்கு உதவி செய்துள்ளது என்று அருகில் உள்ளவர்கள் கூறுகின்றனர் .

ஒரு  குற்றவாளி, கொலை கேசில்  தொடர்புள்ள ஒருவனை எப்படி வெளியில் விட்டு வைத்துள்ளனர் போலீஸ்? 

வெளி நாட்டில் இருந்து ஊடுருவி வந்து அப்பாவி உயிர்களை கொன்று தன் மத தலைவர்களின் இச்சையை பூர்த்திசெய்த தீவிரவாதி கசாபை முறை படி விசாரித்து வழக்கு நடத்தி, அவன் பொருட்டு முப்பது கோடி ரூபாய்கள் செலவழித்த பின்னரே  நீதி மன்ற உத்திரவு  படி  தூக்கில் போட்டதற்கு வாரி சுரிட்டிகொண்டு வந்து இங்கு மனித உரிமைகள் பேசும் வெத்துவேட்டு புர்சியாளர்கள் இதற்கும் அதைதான் சொல்லுவார்களா? புர்சியாளர்கள் வீட்டின் வாசலில் ஜாவீத் மூத்திரம் விட்டால் அவனை உள்ளே அழைத்து விருந்து படைத்து சீராட்டுவார்களோ ! வீட்டின் அருகில் மூத்திரம் பேயாதே என்று கூறியதற்கு துப்பாக்கி சூடு , ஒரு இளம் பெண் பலி. அந்த பெண்ணும் அவள் தாயும் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனித உரிமைகள் செல்லுபடி ஆகாதா?? அது என்ன குற்றவாளிகளுக்கு மட்டுமே வக்காலத்து வாங்கு குந்தாணி மனித உரிமையோ ? குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் யாராக இருந்தாலும் அவர்களை பிடித்து ஆயுள்தண்டனையில் உள்ளே போடவேண்டும். கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரம் மனிதர்களை மீண்டும் காட்டுமிராண்டி யுகத்துக்கே இட்டுசெல்லுகிறது.




Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>