Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

இதுக்கு பதில் சொல்ல ஒரு நாயும் நிக்காது !

$
0
0

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போடுவது இந்திய இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மணிரத்தினம், ரேவதி உள்ளிட்ட 49 நபர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
மணிரத்தினம் ரேவதிக்கு கங்கனா ரனாவத் செருப்படி கேள்வி... பதில் இருக்கா?
இந்த செய்தியை தேசிய ஊடகங்கள் முதல் தமிழக ஊடகங்கள் வரை முக்கிய செய்தியாக வெளியிட்டு விவாதங்களை முன்னெடுத்தன, இந்தியாவை தாண்டி அமெரிக்காவை சேர்ந்த முக்கிய ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு மோடி அரசுக்கு எதிராக பேசிவந்தன.
இந்நிலையில் தற்போது கங்கனா ரணாவத் உள்ளிட்ட 61 முக்கிய நபர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர், அதில் முக்கியமாக 10 குற்றச்சாட்டினை முன்வைத்து, இடதுசாரி அமைப்புகளுக்கு செருப்படி கொடுத்துள்ளனர்.
* பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் குறித்த பின்னணியை ஆராய வேண்டும்
* இவர்கள் திட்டமிட்டு இந்தியாவின் மதிப்பையும், பிரதமர் மோடியின் மதிப்பையும் வெளிநாடுகள் மத்தியில் கெடுக்கும் வண்ணத்தில் செயல்பட்டிருக்கிறார்கள்.
* ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போடுபவர்களை மக்கள் மத்தியில் கெட்டவர்களாக அடையாள படுத்தும் முயற்சில் இந்த அமைப்பினர் இறங்கியுள்ளனர்,
* ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போட்டு யாரையும் இவர்கள் கொல்லவில்லையே ?
* இந்தியாவில் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போடுவது தவறு என்றால், தீவிரவாதிகள் அல்லாஹூ அக்பர் என்று கத்தி கொண்டு பொதுமக்களை கொலை செய்வதை இவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை.
* மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வீடு புகுந்து இந்துக்கள் கொல்லப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வந்தபோதும் அதுகுறித்து வாய் திறக்காமல் இந்த அமைப்பினர் வாயை மூடிக்கொண்டு இருந்தது ஏன்?
* உத்திரபிரதேசம் அலிகார் பகுதிகளில் இந்துக்கள் உடமையை இழந்து வெளியேற்றப்பட்ட போது வாயை திறக்காதது ஏன்?
* நமது ராணுவ வீரர்கள் எல்லையில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு அவர்கள் குடும்பம் நிற்கதி ஆனபோது இந்த 49 நபர்கள் எங்கே சென்றிருந்தார்கள்?
* வார்த்தைக்கு வார்த்தை சபரிமலை கோவிலில் பெண்கள் நுழையவேண்டும் என்று பெண்ணுரிமை பேசிய இவர்கள் முத்தலாக் விஷயத்தில் வாய்திறக்காதது ஏன்?
முதலில் இவர்களை போன்ற உள்நோக்கத்துடன் நாட்டின் மதிப்பை திட்டமிட்டு குறைக்க நினைக்கும் அர்பன் நக்ஸல்களை கண்டறிந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கங்கணா ரனாவத் உட்பட 61 நபர்கள் கடிதம் எழுதியுள்ளனர்



Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles