Quantcast
Channel: பொன் மாலை பொழுது
Viewing all articles
Browse latest Browse all 1252

திராவிடத்தின் திரிபுகளில் இதுவும் ஒன்று

$
0
0
திருக்குறளை பாடிய திருவள்ளுவரை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
சிலர் அவர் சமணர், திராவிடர் கிருத்துவர் என ஆராய்சி வேறு.
ஆனால் கடந்த கால வரலாற்றினை ஆராய்ந்தோம் என்றால் #சைவசமயம் மட்டுமே குறளை தனது #சமயநூல்களில் ஏற்றுள்ளது.
மையிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோயில் எழுப்பியது,
திருவள்ளுவநாயனார் குருபூஜை செய்வது என்று சைவசமயம் வள்ளுவரை கொண்டாடுகின்றது.
மாதவ சிவஞான சுவாமிகள், தாம் அருளிய சிவஞான போத மாபாடியத்தில், முதலில் திருப்பாசுரம், திருவாசகம், திருக்குறள் பதிவிட்டே பாடியம் இயற்றிஉள்ளார்.
அதுபோல் #சிவஞானசுவாமிகள்#சோமேசர்முதுமொழிவெண்பா என்ற குறள் வழி விளக்க நூலை அருளியுள்ளார்.
இவ்வாறு சைவசமய முன்னோர்கள், திருக்குறளை சைவ நூலாக கொண்டாடியுள்ளார்கள்.
இதற்க்கெல்லாம் மணிமகுடமாக நமது சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான "நெஞ்சு விடு தூது "என்ற நூலில் -
#ஸ்ரீஉமாபதிசிவாச்சாரியார்,
"தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவ ரென்று - நிலைத்தமிழின்,
#தெய்வபபுலமைத்திருவள்ளுவர் உரைத்த,
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் "
என்று ஒரு குறளையே எடுத்தாண்டுள்ளார்.
இதில், நிலைத்தமிழ் என்றும் தெய்வப் புலமை என்றும், திருவள்ளுவர் என்றும்
ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் 13ம் நூற்றாண்டிலேயே சைவசமய. சித்தாந்த நூல் ஒன்றில் குறளை போற்றியுள்ளது மகிழத்தக்கதாகும்.
1925 ஆம் ஆண்டுக்கு முன்புவரை திருவள்ளுவர் சைவகோலத்திலேயே அவர் படம் வரையப்பட்டுள்ளது என்பதை பழமையான நூல்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது.
சிவார்ப்பணம்.
@-#தில்லைகார்த்திகேயசிவம்.
மேலும் தொடர்பு பதிவுகள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2213504432296449&id=100009107423631

Viewing all articles
Browse latest Browse all 1252

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!