Stanley Rajan அவர்களின் பதிவு !!
சென்னை கோட்டையில் இருப்பதால் அமைச்சர்கள் அக்கோட்டை நிலத்தை பட்டா போடமுடியாது, கோவில் நிலங்களை அங்கு குடியிருப்போருக்கு கொடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
ஆலயம் என்பது தனிப்பட்ட விவகாரம், அதற்கு அறநிலையதுறை என்றொரு அராஜக துறையினை அமைத்ததே மாபெரும் தவறு.
இங்கு மசூதிகளும் வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களும் அவரவரிடம் இருப்பது போலவே இந்து ஆலயங்களையும் அவற்றின் சொத்துக்களையும் ஆலய நிர்வாகத்திடமே விட்டுவிட வேண்டும்.
அரசுக்குத்தான் அறிவில்லை என்றால் ஆலய சொத்துக்களை பட்டா போட வரிசையில் நிற்பவருக்குமா யோசனை இல்லை ?
சிவன் சொத்து குல நாசம் என்பார்கள், ஆலய சொத்துக்கு ஆசைபட்ட எவனும் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை.
மிகப்பெரிய உதாரணம் ஆப்கானிஸ்தான்.
அங்கிருந்துதான் வந்து வடக்கத்திய ஆலயங்களை கொள்ளை அடித்து குதிரையிலும் ஒட்டகத்திலும் ஏற்றி சென்றார்கள், கஜினியும் கோரியும் ஆப்கனுக்கு கொண்டு சென்ற கோவில் சொத்துக்கள் ஏராளம்.
அதை வைத்து என்னவோ செய்தார்கள், கஜினி அணை எல்லாம் கட்டிப்பார்த்தான்.
ஒரு மண்ணும் உருப்படவில்லை, இன்றுவரை அது தரித்திர தேசமே. ஏதோ ஒரு சாபம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இங்கு ஆலயங்களை அசைத்துப்பார்த்தான் ராபர்ட் கிளைவ், ஆம் இந்தியாவில் வெள்ளையன் ஆட்சியினை தொடங்கி வைத்த அந்த கிளைவ்.
கொஞ்ச நாளில் அவன் தற்கொலை செய்துகொண்டான்.
அவன் சாவுக்கு பின் இந்து ஆலயங்களில் கைவைக்க வெள்ளையன் அஞ்சினான்,
200 ஆண்டுகாலம் அவன் ஆண்டபொழுது இந்து ஆலயம் பக்கமோ அதன் சொத்து பக்கமோ தலைவைத்தும் படுக்கவில்லை.
200 ஆண்டுகாலம் அவன் ஆண்டபொழுது இந்து ஆலயம் பக்கமோ அதன் சொத்து பக்கமோ தலைவைத்தும் படுக்கவில்லை.
மாறாக வெள்ளையனும் அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றான், மதுரை ஆலயத்துக்கு ஒரு வெள்ளை கலெக்டர் பக்திமானாகவே மாறி இருந்திருக்கின்றான்.
வெள்ளையன் ஆட்சியில் ஆலயத்துக்கான முழு சுதந்திரத்தை அவன் அளித்திருந்தான்.
இந்து ஆலயங்களுக்கான சோதனை ஆச்சரியமாக சுதந்திர இந்தியாவில்தான் வந்தது அதுவும் தமிழக ஆலயங்களுக்கான சோதனை திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான் வந்தது.
இங்கு எல்லாமே நல்ல திட்டம் போலத்தான் தெரியும், ஆனால் கட்சிக்காரனுக்கும் அவன் மூலம் தனக்கும் பலனில்லா எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் திராவிட கட்சிகள் அனுமதிக்காது.
கொள்ளை பொருளில் உங்களுக்கு பங்கு உண்டு என்றுதான் படை நடத்தினான் அலெக்ஸாண்டர், திராவிட கட்சிகளும் அந்த பாணியே.
அவர்கள் மதுக்கடை திறப்பார்கள் கட்சிக்காரன் சம்பாதிப்பான் கமிஷன் கட்சிக்கு வரும், அவர்கள் கல்லூரி பள்ளிக்கு அனுமதி கொடுப்பார்கள், கட்சிக்காரன் சம்பாதிப்பான் கப்பம் கட்சிக்கு வரும்.
இது எல்லா வகையிலும் உண்டு.
அறநிலையத்துறை என ஆலய சொத்துக்களை ஆட்டையினை போட்டது இப்படித்தான், கட்சி ஆட்சி அமைக்க தொண்டன் பாடுபடுவான் ஆட்சி அமைந்ததும் நலத்திட்டம் என அறிவித்து தொண்டனை பலன் பெற செய்வார்கள், தொண்டன் மூலம் கமிஷன் கட்சிக்கு செல்லும்.
பின் அடுத்த தேர்தலுக்கு வருவார்கள் செலவழிப்பார்கள் சம்பாதிப்பார்கள் அது ஒரு சக்கரம்.
அப்படித்தான் இந்த அறநிலையதுறையும் அமைத்தார்கள், அது கோவில் சிலை முதல் சொத்துவரை ஆட்டையினை போட்டது, கமிஷன் சரியாக சேரவேண்டிய இடத்தில் சேர்ந்தது.
இப்பொழுது குடியிருப்பவனுக்கே சொந்தம் என மொத்தமாக தலைமொழுக பார்க்கின்றார்கள் இது சரியல்ல
கோவில் சொத்தை தொட்டவனும் கெட்டான் எடுத்தவனும் கெட்டான்.
கொடுக்கும் அரசுக்கும் நல்லதல்ல, வாங்குபவர்களுக்கும் நல்லதல்ல
கோவில் சொத்துக்கள் நிலையான வருமானத்தை கோவிலுக்கு கொடுக்கும் வகையில் நிர்மானிக்கபட்டவை, ராஜராஜசோழனின் சாவா மூவா பேராடுகள்"போன்றவை
அது என்ன ஆடுகள், அவற்றுக்கு சாவும் மூப்பும் இல்லை என்றால் எப்படி?
அவன் தஞ்சை கோவிலில் வருமானத்துக்கு பல வழி செய்திருந்தான் அதில் ஒன்றுதான் இது. அதாவது அவன் சில ஆடுகளை ஒருவருக்கு அளித்திருந்தான், அவர்கள் ஆட்டின் பால், குட்டிகள் என எடுத்து கொள்ளலாம்
ஆனால் ஆலயத்தின் தீப செலவு அவர்களது.
ஒருவேளை அவர்கள் வேறு நாட்டுக்கோ இல்லை தீபம் ஏற்றமுடியா நிலையோ வந்தால் அரசன் கொடுத்த அதே ஆடுகளின் எண்ணிக்கையில் இன்னொருவருக்கு கைமாற்ற வேண்டும்.
எப்படி பெற்றார்களோ அப்படி அதே தரத்தில் அதே எண்ணிக்கையில் திரும்ப கொடுத்தல் வேண்டும்.
ஆம் அந்த ஆடுகளுக்கு சாவும் மூப்பும் இல்லை.
எக்காலமும் ஆலய சொத்துக்கள் அப்படியே இருக்க வேண்டும் அதன் பலன் கிடைத்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அக்கால ஏற்பாடு.
எல்லா கோவிலின் சொத்துக்களும் அப்படியே
அதன் பலன்களை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும், அதில் ஆலய திருப்பணி நடக்கவேண்டுமே தவிர சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.
அதன் பலன்களை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும், அதில் ஆலய திருப்பணி நடக்கவேண்டுமே தவிர சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.
அப்படி யாராவது சொந்தம் கொண்டாடினால் நீங்கள் சேர்த்து வைப்பது சொத்து அல்ல, சந்ததிக்கான பாவம்.அக்கம்பக்கம் பாருங்கள் இல்லை ஆப்கானிஸ்தானை பாருங்கள்..
உதாரணம் வேண்டுமானால்
ஆம் இன்று தரித்திரமாக திரியும் அவர்களெல்லாம் கஜினி முகமதுவுடன் இங்கு ஆலயங்களில் கொள்ளையிட்டவர்களின் வாரிசுகள்,
அவர்களை பார்த்து உங்கள் சந்ததிகளை மனதில் வைத்துகொள்ளுங்கள்.
OM NAMASIVAYA..
Stanley Rajan..