மாற்று கருத்துக்களை தாங்க முடியாத திமுக கும்பல்கள் பிற ஊடகங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. கருத்து சுதந்திரம், ஊடகதர்மம், என்றெல்லாம் வழித்துக்கொண்டு கத்தும் திமுக , தனக்கு மாற்றாக சரியான சான்றுகளோடு சொல்லப்படும் கருத்துக்களால் மிகவும் அரண்டுபோயுள்ளது.தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் திமுகவின் ஊதுகுழலாக மாறியுள்ளது பலவருடங்களாக இருக்கும் நிலையில் மாற்று கருத்துக்களை சொல்ல எவருக்கும் அனுமதி இல்லை என்ற நிலையில் சமூக ஊடகங்களில் இவர்களுக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்களுக்கும் கூட இப்போது அபாயம். அப்டி சொல்பவர்களின் ஊடக கணக்குகளை திமுக சார்பு கும்பல்கள் முடக்குகின்றன. தங்களுக்கு மாற்றாக எந்த ஒரு கருத்துருவாக்கமும் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் திமுக மிக மிக கவனமாக சற்றும் ஈவு இரக்கம் இல்லாத ஒரு பாசிச அமைப்பாகவே உள்ளது. இவர்களை இப்படியே விடமுடியாது. விடவும் கூடாது. சமூக தளங்களில் இன்னமும் தீவிரமாக செயல் பட்டு இவர்களின் கொட்டத்தை நாம் அடக்கியே ஆகவேண்டிய கட்டாயம்.
↧